7 மில்லியன் டிஸ்லைக்குகள் பெற்ற ‘சடக் 2’ ட்ரெய்லர் - படக்குழு அதிர்ச்சி

‘சடக் 2’ படத்தின் ட்ரெய்லர் 7 மில்லியன் டிஸ்லைக்குகளை பெற்றிருப்பது படக்குழுவை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

  • Share this:
இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜீன் மாதம் 14-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மரணத்துக்கு பின்னர் பாலிவுட்டில் இருக்கும் வாரிசு அரசியல் குறித்த விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக பாலிவுட்டில் இருக்கும் கரண் ஜோஹர், ஆலியா பட் உள்ளிட்ட வாரிசு பிரபலங்களை குறிவைத்து ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

வாரிசு நடிகர்களின் படைப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்று கருத்துகள் வலுத்து வரும் இந்த சூழ்நிலையில் இயக்குநர் மகேஷ் பட்டின் மகள்கள் ஆலியா பட், பூஜா பட் நடித்திருக்கும் ‘சடக் 2’ படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியிடப்பட்டது.

இதையடுத்து ‘சடக் 2’ படத்தின் ட்ரெய்லரை டிஸ்லைக் செய்து எதிர்ப்பைக் காட்ட நெட்டிசன்கள் முடிவு செய்தார்கள். இதனால் ட்ரெய்லர் வெளியான 12 மணி நேரத்தில் 1.5 மில்லியன் டிஸ்லைக்குகள் பதிவாகின. மேலும் #DisLike என்ற ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் ட்ரெண்டாகின.


2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் இந்த ட்ரெய்லர் வீடியோவை இதுவரை 7 மில்லியனுக்கும் அதிகமானோர் டிஸ்லைக் செய்துள்ளனர். இதன் மூலம் அதிக டிஸ்லைக்குகளைப் பெற்ற இந்தியப் படம் என்ற பெயரை ‘சடக் 2’ பெற்றிருக்கிறது.மில்லியன் கணக்கில் டிஸ்லைக்குகள் தொடர்வதால் ‘சடக் 2’ படக்குழுவினர் உட்பட பாலிவுட் திரையுலக பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இத்திரைப்படம் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
First published: August 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading