கதாபாத்திரமாக மாறுவதற்கு சில நடிகர்கள் எந்த எல்லைக்கும் செல்வதுண்டு. உடல் எடையை குறைப்பது அதிகரிப்பது இன்னொரு ஆளாக மேக்கப் போட்டுக் கொள்வது என தொன்று தொட்டு வரும் கலாச்சாரம் இது.
நடிகர்கள் அளவுக்கு நடிகைகள் ரிஸ்க் எடுப்பதில்லை. நடிகைகளின் அழகும் கவர்ச்சியும் இந்திய சினிமாவுக்கு தேவைப்படும் கச்சாப்பொருள் என்பதால் நடிகர்கள் மேற்கொள்ளும் உடல்ரீதியான சாகசங்களில் நடிகைகள் அதிகம் ஈடுபடுவதில்லை. அதேநேரம் கதாபாத்திரத்திற்காக மற்றவர்களிடம் கற்றுக் கொள்வது உண்டு.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பிப்ரவரி 25 தேதி கங்குபாய் கத்தியவாடி திரைப்படம் வெளியாகிறது. இதில் கங்குபாய் ஆக ஆலியாபட் நடித்துள்ளார். இது நிஜ சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப் பட்டிருக்கும் திரைப்படம். இன்னும் சரியாக சொன்னால் நிஜ கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
பாலியல் தொழிலாளியாக இருந்து அரசியலில் ஈடுபட்ட நபரைக் குறித்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த பாலியல் தொழிலாளியாக இந்தப் படத்தில் ஆலியா பட் நடித்துள்ளார். கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி நடிப்பதற்காக மும்பையின் சிவப்பு விளக்கு பகுதியான காமாத்திபுராவில் உள்ள பாலியல் தொழிலாளிகளை சந்தித்து உரையாடி அவர்களின் வாழ்க்கைக் குறித்தும் நடை உடை பாவனை குறித்தும் அறிந்து கொண்டிருக்கிறார் ஆலியா பட். நேற்று இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ஆலியா பட்டின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
கங்குபாய் கத்தியவாடி திரைப்படம் சென்ற வருடம் ஜூலை 30ஆம் தேதி வெளியாக வேண்டியது. கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட இந்த வருடம் ஜனவரி 6ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தனர். ஜனவரியில் ஆர் ஆர் ஆர், ராதேஷ்யாம் படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் இதன் வெளியீட்டை பிப்ரவரி 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இந்தமுறை மாற்றமில்லாமல் 25ஆம் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.