முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அல்லு அர்ஜுனுடன் நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகை...!

அல்லு அர்ஜுனுடன் நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகை...!

புஷ்பா

புஷ்பா

Alia Bhatt: இந்தி நடிகைகள் தெலுங்கு படங்களை விரும்புவதற்கு இந்திக்கு இணையாக அவர்கள் தரும் சம்பளமும், பாலிவுட் நடிகர்களுக்கு இணையாக தெலுங்கு நட்சத்திரங்கள் பெற்றிருக்கும் புகழும் முக்கிய காரணம்.

  • Last Updated :

அல்லு அர்ஜுனுடன் நடிப்பதற்கான வாய்ப்புக்கு காத்திருப்பதாக இந்தியின் பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

புஷ்பா திரைப்படம் இந்தி திரைப்பட உலகை அப்படியே சுழற்றி போட்டிருக்கிறது. தெலுங்கு திரைப்படமான புஷ்பாவின் இந்தி டப்பிங் 100 கோடிகளைத் தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தியில் சென்ற வருடமும் இந்த வருடமும் வெளியான நேரடி திரைப்படங்களை விடவும் அல்லு அர்ஜுனின் புஷ்பா அதிகம் வசூல் செய்தது.

அக்ஷய் குமாரின் சூரியவன்ஷி, 83 படங்கள் தவிர்த்து அனைத்தும் அல்லு அர்ஜுனின் புஷ்பாவுக்கு கீழ்தான் வசூலித்தன.இது இந்தி திரையுலகை அதிர வைத்துள்ளது. அல்லு அர்ஜுனுடன் நடிப்பதற்கு இந்தியின் பிரபல நடிகைகள் தயாராக உள்ளனர். அதனை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார் ஆலியா பட்.

Also read... தென்னிந்தியா வேற்று கிரகமா? - இந்திவாலாவை விளாசிய சுருதி ஹாசன்!

பேட்டி ஒன்றில், அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்க ஆவலாக இருப்பதாகவும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆலியா பட் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் சிறிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார். ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடித்திருக்கும் இந்தப் படத்தில் ஆலியா பட்டின் சிறிய வேடத்திற்கு 9 கோடிகள் அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தி நடிகைகள் தெலுங்கு படங்களை விரும்புவதற்கு இந்திக்கு இணையாக அவர்கள் தரும் சம்பளமும், பாலிவுட் நடிகர்களுக்கு இணையாக தெலுங்கு நட்சத்திரங்கள் பெற்றிருக்கும் புகழும் முக்கிய காரணம். ஆலியா பட்டை தொடர்ந்து ஜான்வி கபூர் விரைவில் தெலுங்குப் படத்தில் நடிக்கலாம் என்கின்றன தகவல்கள்.

First published:

Tags: Alia Bhatt, Allu arjun