Home /News /entertainment /

RRR படத்தின் மீது அதிருப்தி... ராஜமெளலியை அதிர்ச்சியாக்கிய ஆலியா பட்

RRR படத்தின் மீது அதிருப்தி... ராஜமெளலியை அதிர்ச்சியாக்கிய ஆலியா பட்

ஆலியா பட் - ராஜமெளலி

ஆலியா பட் - ராஜமெளலி

உலகம் முழுவதும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மூன்றே நாளில் 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இருந்தது.

    ஆர்.ஆர்.ஆர் படத்தின் மீது அதிருப்தியில் இருந்த ஆலியா பட், தற்போது அந்தப் படம் மீதான போஸ்ட்டுகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கியுள்ளார். 

    இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கியுள்ள திரைப்படம் 'ஆர் ஆர் ஆர்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருந்த இந்தப்படம் வரும் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

    எதிர் நீச்சல் சீரியல் இயக்குநர் திருச்செல்வத்தை கண்டித்து புகைப்பட கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்

    தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான இப்படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். உலகம் முழுவதும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மூன்றே நாளில் 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இருந்தது. ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் கதை ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆரை முன்னிலைப்படுத்தியே எழுதப்பட்டிருந்தது. இதனால் பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கு மிகக் குறைந்த காட்சிகளே இருந்தது.

    அரபிக் குத்து பாடலுக்கு ஷில்பா ஷெட்டி, ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் அட்டகாச நடனம்!

    இதனால் பயங்கர அதிருப்தியில் இருந்த ஆலியா பட், சமூக வலைதளங்களில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தொடர்பாக தான் பதிவிட்டிருந்த அனைத்தையும் நீக்கியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    அடுத்த செய்தி