ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிம்பிளாக வளைக்காப்பு நிகழ்வை முடித்த ரன்பீர் - ஆலியா பட் ஜோடி!

சிம்பிளாக வளைக்காப்பு நிகழ்வை முடித்த ரன்பீர் - ஆலியா பட் ஜோடி!

ஆலியா பட் வளைகாப்பு

ஆலியா பட் வளைகாப்பு

சிம்பிளாக மும்பையில் இருக்கும் ரன்பீரின் வீட்டில் ஆலியா பட் வளைகாப்பு அரங்கேறி இருக்கிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகை ஆலியா பட்டின் வளைக்காப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

  பாலிவுட் காதல் ஜோடியான ரன்பீர் - ஆலியா இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர். நீண்ட நாட்களாக காதலித்து வந்த  இவர்கள் திடீரென்று திருமண செய்தியை அறிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். தங்களுக்கு மிகவும் பிடித்தமான வீட்டின் பால்கனியில் இவர்களின் திருமணம் நடைப்பெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்ட  இந்த ஜோடி ஜீன் மாதம் தங்களின் முதல் குழந்தையின் வருகைக்காக காத்திருக்கிறோம் என கூறி அடுத்த இன்ப அதிர்ச்சியை தந்தனர். ஆலியா பட் கர்ப்பம் என தெரிந்ததும் பாலிவுட் கேமராக்கள் அப்படியே அவர் பக்கம் திரும்பினர்.

  வேற லெவல் ரீச்.. பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லவ் டுடே டிரெய்லர்!

  ரன்பீர் - ஆலியா ஜோடியாக எங்கு சென்றாலும் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி  ஹிட் அடித்தன. சமீபத்தில் படத்தின் புரமோஷன் விழாவில் ரன்பீர், ஆலியாவை பத்திரமாக மேடையில் இருந்து கீழே இறக்கிய வீடியோவும் சோஷியல்  மீடியாவில் வைரலாகி இருந்தது. அதே போல தனது கர்ப்பகால உடை தேர்வு, ஃபேஷன் பற்றியும் ஆலியா அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தசரா பண்டிகையின் போது ஆலியா பட்டின் வளைகாப்பு விழாவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

  மிகவும் சிம்பிளாக மும்பையில் இருக்கும் ரன்பீரின் வீட்டில் ஆலியா வளைகாப்பு அரங்கேறி இருக்கிறது. இந்த புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன. மஞ்சள் நிற அனார்கலி சூட்டில் அழகு தேவதையாக ஜொலிக்கிறார் ஆலியா. நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே  இந்த விழாவில் கலந்து கொண்டனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆலியா பட்டின் தங்கைகள் பூஜா பட், ஷமீன் பட், ரன்பீரின் அம்மா நீத்து கபூர், கசின் கரிஷ்மா கபூர், ஆகியோர் இந்த விழாவில் இருப்பதை பார்க்க முடிகிறது.

  ரன்பீரின் அம்மா, அவரின் அக்கா ஆகியோர் ஆலியாவை கொஞ்சி முத்தமிடும் படங்கள் லைக்ஸை அள்ளியுள்ளன.


  கபூர் குடும்பத்தினர் தவிர பாலிவுட் பிரபலங்கள் கரண் ஜோகர், அனுஷ்கா ரஞ்சன், அயன் முகர்ஜி ஆகியோரும் ஆலியா பட் வளைகாப்புக்கு வந்து வாழ்த்துக்களை பரிமாறி இருக்கிறார்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Alia Bhatt, Bollywood, Ranbir Kapoor