உலகின் முதல் 4K HDR ட்ரெய்லரை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!

முதல் 4K HDR தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ட்ரெய்லரை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

news18
Updated: February 11, 2019, 8:37 PM IST
உலகின் முதல்  4K HDR ட்ரெய்லரை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!
அலாவுதீனின் அற்புத கேமரா
news18
Updated: February 11, 2019, 8:37 PM IST
நவீன் நடித்து இயக்கியிருக்கும் 'அலாவுதீனின் அற்புத கேமரா' பட ட்ரெய்லரை ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

மூடர் கூடம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நவீன். முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படத்தை அடுத்து நவீன் இயக்கி நடித்துள்ள படம் 'அலாவுதீனின் அற்புத கேமரா'. இந்தப் படத்தில் நவீனுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முழுவதும் வெளிநாட்டில் படமான இந்தப் படத்தில், பிக் பாக்கெட் அடிப்பவராக நடித்துள்ளார் ஆனந்தி. பாட்ஷா ஒளிப்பதிவில் நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. உலகின் முதல் 4K HDR தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ட்ரெய்லரை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.'இந்த வாழ்க்கையில ஏதாவது அதிசயம் நடந்திராதா? என்ற ஏக்கத்தில் நம்ம எல்லாரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்' என்ற வசனத்துடன் ஆரம்பமாகும் இந்தப் படத்தின் டிரைலர் உண்மையில் 4K HDR தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாகவே உள்ளது எனலாம். அலாவுதீனிடம் கிடைத்த அற்புத விளக்கு போல் இந்தப் படத்தின் ஹீரோ நவீனிடம் அற்புத கேமரா கிடைக்கிறது. அதன் பயனும் விளைவுகளும் அதனால் ஏற்படும் ஆபத்துக்களும் தான் இந்தப் படத்தின் கதை. ஆக்‌ஷன், த்ரில்லர் கதையம்சத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள்... களைக்கட்டிய சவுந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் திருமணம் - வீடியோ

First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...