அக்ஷய் குமார் நடித்திருக்கும் சரித்திர திரைப்படம் பிருத்விராஜ். இந்த படத்தின் பெயரை மாற்றக்கோரி இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தியாவை ஆண்ட பிருத்விராஜ் சவுகான் அரசரைப் பற்றிய திரைப்படம் பிருத்விராஜ். இதில் பிருத்விராஜ் சவுகான் ஆக அக்ஷய் குமார் நடித்துள்ளார். மனுஷி சில்லர் அவரது மனைவியாக நடித்துள்ளார். சஞ்சய் தத் அசுவதோஷ் ராணா, லலித் திவாரி உட்பட ஏராளமானோர் இதில் நடித்துள்ளனர். யாஷ் ராஜ் பிலிம்ஸ் இதனை தயாரித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் இந்த வருடம் வெளியாக வேண்டிய திரைப்படங்கள் பலவும் தங்களது வெளியீட்டை தள்ளி வைத்தன. அதில் பிருத்விராஜ் திரைப்படமும் ஒன்று. இப்போது இந்தப் படத்தை ஜூன் 3ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
View this post on Instagram
அக்ஷய் குமாரின் இந்தி திரைப்படங்கள் சென்னை, கோவை போன்ற தமிழக நகரங்களில் ஓரளவு வசூலை பெறும். இப்போது அதையும் தாண்டி அனைத்து தமிழ் அறிந்த ரசிகர்களிடம் படம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழில் டப் செய்து வெளியிடுகின்றனர். இந்தியில் படம் வெளியாகும் அதே ஜூன் 3ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
Also read... கமலின் விக்ரம் படத்திற்கு சிறப்பு செய்த ட்விட்டர்!
இந்நிலையில் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் கூறி வருகினறன. வட இந்தியாவில் செயல்பட்டு வரும் கர்ணிக் சேனா, அகில பாரத சத்ரிய மகாசபா, சனாதன் சேனா ஆகிய அமைப்புகள் மன்னர் பிருத்விராஜை அவமதிக்கும் விதமாக அக்ஷய குமாரின் படத்திற்கு அவரது பெயரை வைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும், சாம்ராட் பிருத்விராஜ் சவுகான் என்பதே அவரது பெயர், அதையே படத்திற்கு வைக்க வேண்டும் என்றும் படம் திரையரங்கில் வெளியிடுவதற்கு முன்பாகவே படத்தை தங்களுக்கு போட்டுக் காட்ட வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கோரிக்கை வைத்துளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Akshay Kumar, Entertainment