Home /News /entertainment /

தள்ளிப்போன அக்ஷய் குமாரின் பிருத்விராஜ் பட வெளியீடு...!

தள்ளிப்போன அக்ஷய் குமாரின் பிருத்விராஜ் பட வெளியீடு...!

அக்ஷய் குமாரின் பிருத்விராஜ்

அக்ஷய் குமாரின் பிருத்விராஜ்

கொரோனா தொற்று குறைந்து சகஜநிலை திரும்பும்போதே பிருத்விராஜை வெளியிடுவது எனபதில் தயாரிப்பு தரப்பு உறுதியாக உள்ளது.

  • News18
  • Last Updated :
இந்த மாதம் 21 ஆம் தேதி வெளியாவதாக இருந்த பிருத்விராஜ் படத்தின் வெளியீடு மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பிருத்விராஜ் சௌகான் மன்னனின் வாழ்க்கைக் கதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் படம் பிருத்விராஜ். சரித்திர சண்டைப் படம். இதில் அரசர் பிருத்விராஜ் சௌகானாக அக்ஷய் குமார் நடித்துள்ளார். அவருடன் சஞ்சய் தத். சோனு சூட், அஷுவதோஷ் ராணா உள்பட பலர் நடித்துள்ளனர். சந்திரபிரகாஷ் திவேதி படத்தை இயக்கியுள்ளார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு.

ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் எந்த நேரத்திலும் ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது. பெரிய பட்ஜெட் படத்தை இப்போது வெளியிட்டு ரிஸ்க் எடுக்க விரும்பாத தயாரிப்பாளர் பட வெளியீட்டை மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார். ஏற்கனவே டிசம்பர் 31 வெளியாவதாக இருந்த ஷாகித் கபூரின் ஜெர்சி திரைப்படம் தள்ளிப்போனது. பிறகு ஜனவரி 7 வெளியாவதாக இருந்த ஆர்ஆர்ஆர் படம். இப்போது பிருத்விராஜ் படமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Also read... பாடல்கள் இல்லாமல் தயாராகும் சசிகுமாரின் காமன் மேன்...!

2021 இல் இந்தி திரையுலகை முந்திக் கொண்டு தமிழ், தெலுங்கு திரையுலகங்கள் அதிகம் வசூலித்தன. இந்த வருடம் இந்தித் திரையுலகுக்கு வசூலை ஈட்டித்தரும் படங்களாக அவர்கள் நினைத்தவை ஒன்றன் பின் ஒன்றாக தள்ளிப் போவது இந்தி திரையுலகை ரொம்பவே கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. சென்ற வருடம் இதேபோன்ற சூழலில் வெளியான அக்ஷய் குமாரின் பெல்பாட்டம் திரையரங்கில் சோபிக்கவில்லை. அதேநிலை பிருத்விராஜுக்கு நேராமலிருப்பதற்காக படவெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர்.

Also read... வலிமை இந்தி போஸ்டர் - வதந்திகளை பொய்யாக்கிய போனி கபூர்!

கொரோனா தொற்று குறைந்து சகஜநிலை திரும்பும்போதே பிருத்விராஜை வெளியிடுவது எனபதில் தயாரிப்பு தரப்பு உறுதியாக உள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Akshay Kumar

அடுத்த செய்தி