Home /News /entertainment /

சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் நடிக்கும் நடிகர் இவர் தான்...

சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் நடிக்கும் நடிகர் இவர் தான்...

சூரரைப்போற்று

சூரரைப்போற்று

இந்தியில் தயாராகும் சூரரைப்போற்று படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக்கில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்கப்போகும் நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ படம் கடந்த வருடம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட மேலும் பலர் நடித்து இருந்தனர். விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாரானது.

    ஓடிடி-யில் வெளியாகிய ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சூரரைப்போற்று படத்தை இந்தியில் இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் இயக்குநர். இதில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கவிருக்கிறார்.

    இந்தியில் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் பயோபிக் படங்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும். அந்த வகையில் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த சூரரைப்போற்று படம், இந்தி ரசிகர்களையும் கவரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    Akshay Kumar to star in soorarai pottru hindi remake, soorarai pottru hindi, soorarai pottru akshay kumar, soorarai pottru hindi remake akshay kumar, soorarai pottru, soorarai pottru suriya, soorarai pottru hindi, suriya soorarai pottru, soorarai pottru hindi remake, sudha kongara, சூரரைப்போற்று, சூரரைப்போற்று இந்தி, சூரரைப்போற்று இந்தி ரீமேக், சூரரைப்போற்று சூர்யா, soorarai pottru hindi name, soorarai pottru hindi movie name, akshay kumar net worth, akshay kumar age, akshay kumar son, akshay kumar family, akshay kumar real name, akshay kumar birthday, akshay kumar wife and child, akshay kumar house
    அக்ஷய் குமார்


    இந்தியில் தயாராகும் சூரரைப்போற்று படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் வெற்றிப் பெற்ற சூரரைப்போற்று படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. ஆகையால் இந்தியிலும் ஜி.வி.பிரகாஷே இசையமைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Suriya, Akshay Kumar

    அடுத்த செய்தி