முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Akshay Kumar: ராட்சசன் இந்தி ரீமேக் - விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார்?

Akshay Kumar: ராட்சசன் இந்தி ரீமேக் - விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார்?

ராட்சசன் - அக்‌ஷய் குமார்

ராட்சசன் - அக்‌ஷய் குமார்

யூடியூப் வழியாக ஏற்கனவே இந்திப்பட ரசிகர்களுக்கு அறிமுகமான ராட்சசனை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ராம் குமார் இயக்கத்தில் தமிழில் வெளியான ராட்சசன் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் விஷ்ணு விஷால் நடித்த போலீஸ் அதிகாரி வேடத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார்.

தென்னிந்திய மொழிகளில் ஏதாவது நல்ல படம் வந்தால், பாலிவுட் உடனே அதன் உரிமையை வாங்கிக் கொள்கிறது. தமிழில் வெளியான அந்நியன், கைதி, மாநகரம் என பல படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட, இப்போது ராட்சசனையும் இந்திக்கு கொண்டு செல்கிறார்கள்.

முண்டாசுப்பட்டி என்ற நகைச்சுவைப் படத்தை இயக்கிய ராம் குமார் அதற்கு நேரெதிராக த்ரில்லர் படமான ராட்சசனை இயக்கினார். சமீபத்தில் வெளியான த்ரில்லர்களில் பார்வையாளர்களை பதட்டம் கொள்ள வைத்த படம் இதுதான். மாணவிகளை வில்லன் நெருங்கும் போது தியேட்டர்கள் ரசிகர்களின் பதட்டக் குரலால் நிறைந்தது. இதன் இந்தி டப்பிங் யூடியூபில் ஒரு வருடம் முன்பு வெளியானது. இதுவரை இரண்டரை கோடிக்கும் அதிகமானவர்கள் இதனை பார்த்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யூடியூப் வழியாக ஏற்கனவே இந்திப்பட ரசிகர்களுக்கு அறிமுகமான ராட்சசனை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். அக்ஷய் குமார், விஷ்ணு விஷால் நடித்த வேடத்திலும், ரகுல் ப்ரீத் சிங், அமலா பால் நடித்த வேடத்திலும் நடிக்க உள்ளனர். படத்தை இயக்குகிறவர் ரஞ்சித் திவாரி. இவர் அடுத்த மாதம் வெளியாக உள்ள அக்ஷய் குமாரின் பெல் பாட்டம் படத்தின் இயக்குனர்.

அக்ஷய் குமார் வருடத்துக்கு ஆறுபடம் என்ற டார்கெட்டில் நடிப்பவர். ராட்சசன் இந்தி ரீமேக்கை ஆகஸ்டில் தொடங்குவது என முடிவு செய்துள்ளனர். யுகேயில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. அடுத்த வருடம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Akshay Kumar