பாலிவுட் நடிகர் அக்‌ஷ்யகுமாருக்கு கொரோனா தொற்று

பாலிவுட் நடிகர் அக்‌ஷ்யகுமாருக்கு கொரோனா தொற்று

அக்‌ஷய்குமார்

பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் தனக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

  • Share this:
மகாராஷ்ட்ராவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 49, 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29, 53, 023 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் ஒரேநாளில் மேலும் 277 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55,656 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரம் மாநிலத்தில் ஒரேநாளில் அதிகபட்சமாக 37, 821 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24, 95, 315 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை மாநிலத்தில் 4 லட்சத்து ஆயிரத்து 72 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மட்டுமல்லாது இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் வேகமாக கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயப்படுத்துவதிலும் அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது.



இந்நிலையில் நடிகர் அக்‌ஷய்குமார் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே பாலிவுட் பிரபலங்கள் ரன்வீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: