Akshay Kumar: ராட்சசன் இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார் - டைட்டில் என்ன தெரியுமா?

ராட்சசன் ரீமேக்கில் அக்‌ஷய் குமார்

யுகே-யில் தொடர்ந்து பெண் குழந்தைகள் கடத்திக் கொல்லப்படுகின்றனர். அதனை போலீஸ் அதிகாரியான அக்ஷய் குமார் கண்டுபிடிக்கிறார்.

  • Share this:
    ராட்சசன் படத்தை இந்தியில் ரீமேக் செய்கின்றனர். ஆகஸ்டில் இதன் படப்பிடிப்பு தொடங்குவதாக நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். இன்று அதன் பெயர் தெரிய வந்துள்ளது.

    தமிழில் வெளியான ராட்சசன் இதுவரை வந்த க்ரைம் த்ரில்லர் படங்களில் ஓர் மைல் கல்லாக அமைந்தது. யூடியூபில் இதன் இந்தி டப்பிங் வெளியாகி இரண்டரை கோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். இதனை இந்தியில் ரீமேக் செய்கின்றனர். அக்ஷய் குமார், ரகுல் ப்ரீத் சிங் இருவரும் முறையே விஷ்ணு விஷால், அமலா பால் நடித்த வேடங்களை செய்கின்றனர். ஆகஸ்டில் யுகே-யில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.

    யுகேயில் தொடர்ந்து பெண் குழந்தைகள் கடத்திக் கொல்லப்படுகின்றனர். அதனை போலீஸ் அதிகாரியான அக்ஷய் குமார் கண்டுபிடிக்கிறார். யுகே-க்கு தகுந்த படியும், இந்தி ரசிகர்களுக்கு ஏற்படியும் கதையில் பல மாறுதல்கள் செய்யவுள்ளனர். குழந்தைகளை கொலை செய்யும் கொலைகாரனை கண்டுபிடிக்க நடத்தும் ஆபரேஷனுக்கு மிஷன் சின்ட்ரெல்லா என படத்தில் பெயர் வைத்துள்ளனர். அதையே படத்திற்கும் சூட்டியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அக்ஷய் குமார் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகும் பெல் பாட்டம் படத்தை இயக்கியிருக்கும் ரஞ்சித் திவாரி மிஷன் சின்ட்ரெல்லாவை இயக்குகிறார். அக்ஷய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த லட்சுமி திரைப்படம் தமிழ் காஞ்சனாவின் ரீமேக். விரைவில் வெளிவரவிருக்கும் பச்சான் பாண்டே தமிழில் வெளியான ஜிகர்தண்டாவின் ரீமேக். இப்போது ராட்சசன் ரீமேக்கில் நடிக்கிறார்.

    அதேபோல் ‘மிஷன் சின்ட்ரல்லா’ போன்று, ‘மிஷன் லயன்’ என்ற பெயரில் ஒரு படத்திலும் அக்ஷய் நடிக்கயிருப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: