• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Akshay Kumar : இந்தியாவில் 100 கோடிகளை கடந்த அக்‌ஷய் குமாரின் சூரியவன்ஷி.. 

Akshay Kumar : இந்தியாவில் 100 கோடிகளை கடந்த அக்‌ஷய் குமாரின் சூரியவன்ஷி.. 

அக்‌ஷய் குமார்

அக்‌ஷய் குமார்

Sooryavanshe Movie : 5 தினங்களில் 100 கோடி வசூலை பெற்ற சூரியவன்ஷி திரைப்படம்..

  • Share this:
    அக்ஷய் குமார் நடிப்பில் சூரியவன்ஷி திரைப்படம் நவம்பர் 5 ஆம் தேதி வெளியானது. முதல் ஐந்து தினங்களில் இப்படம் 100 கோடிகளை இந்திய திரையரங்கு வசூலில் கடந்துள்ளது.

    இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் காப் ட்ரையாலஜியில் சூரியவன்ஷி மூன்றாவது படமாகும். முதலில் சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய சிங்கம் படத்தை இந்தியில் அஜய் தேவ்கானை வைத்து இயக்கினார். படம் ஹிட். அடுத்து பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர் நடித்த டெம்பர் படத்தை சிம்பா என்ற பெயரில்  ரன்வீர் சிங்கை வைத்து எடுத்தார். படம் சூப்பர்ஹிட். இப்போது அக்ஷய் குமார் நடிப்பில் சூரியவன்ஷி படத்தை இயக்கியுள்ளார். படம் பம்பர் ஹிட்.

    மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்களில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களே அனுமதிக்கப்படும் நிலையில் முதல் 5 தினங்களில் 100 கோடிகளை இந்திய திரையரங்கு வசூலில் இப்படம் எட்டியுள்ளது.முதல் நாள் வெள்ளிக்கிழமை - 26.29 கோடிகள், இரண்டாவது நாள் சனிக்கிழமை - 23.85 கோடிகள், மூன்றாவது நாள் ஞாயிற்றுக்கிழமை - 26.94 கோடிகள்,நான்காவது நாள் திங்கள்கிழமை - 14.51 கோடிகள்மொத்தம் 91.59 கோடிகள்.

    also read : நடிகை இலியானாவின் கவர்ச்சி புகைப்படங்கள்..

    ஐந்தாவது நாளான நேற்று செவ்வாய்க்கிழமையுடன் படம் 100 கோடிகளை கடந்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு முன் வெளியான பல அக்ஷய் குமாரின் படங்களைவிட இந்தப் படம் வேகமாக 100 கோடியை எட்டியிருக்கிறது.

    வெளிநாடுகளில் இந்தப் படம் வசூலித்தவை.முதல் நாள் வெள்ளிக்கிழமை - 1.08 மில்லியன் டாலர்கள்,இரண்டாவது நாள் சனிக்கிழமை - 1.15 மில்லியன் டாலர்கள்,மூன்றாவது நாள் ஞாயிற்றுக்கிழமை - 1.06 மில்லியன் டாலர்கள்,நான்காவது நாள் திங்கள்கிழமை - 0.480 மில்லியன் டாலர்கள்,மொத்தம் 3.78 மில்லியன் டாலர்கள். நமது ரூபாய் மதிப்பில் சுமார் 28.01 கோடிகள்.

    கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் வெளியான இந்திப் படங்களில் முதல் பம்பர் ஹிட் திரைப்படமாக சூரியவன்ஷி சாதனை படைத்திருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: