முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரூ. 260 கோடி விமானத்தை சொந்தமாக வைத்துள்ளாரா அக்ஷ்ய் குமார்? – அவரே அளித்த விளக்கம்

ரூ. 260 கோடி விமானத்தை சொந்தமாக வைத்துள்ளாரா அக்ஷ்ய் குமார்? – அவரே அளித்த விளக்கம்

அக்சய் குமார் சொந்தமாக வைத்திருப்பதாக கூறப்பட்ட ஜெட் விமானம் - உட்புறத் தோற்றம்

அக்சய் குமார் சொந்தமாக வைத்திருப்பதாக கூறப்பட்ட ஜெட் விமானம் - உட்புறத் தோற்றம்

தான் ஜெட் விமானம் வைத்திருப்பதாக வந்த செய்தியை ஸ்கிரீன் ஷாட்டுடன் அக்சய் குமார் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டுள்ளது

  • Last Updated :
  • Tamil Nadu, India

‘ரூ. 260 கோடி மதிப்புள்ள ஜெட் விமானத்தை இந்தி நடிகர் அக்சய் குமார் சொந்தமாக வைத்துள்ளார்’ என சமீபத்தில் தகவல்கள் பரவிய நிலையில், அதுபற்றி அக்சய் குமார் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு வைரலாகியுள்ளது.

இந்தி சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அக்சய்குமார். ஆண்டுதோறும் மிக அதிகமாக படங்களில் நடிக்கும் நடிகராக இவர் இருந்து வருகிறார். அந்த வகையில் வருமான வரி அதிகம் செலுத்தும் நடிகர்களில் அக்சய்குமார் முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.

இதற்கிடையே, அவர் சொந்தமாக ஜெட் விமானத்தை வைத்துள்ளார் எனவும், இந்த விமானத்தின் மதிப்பு ரூபாய் 260 கோடி எனவும் சமீபத்தில் தகவல்கள் பரவின. அதிகமான படங்களில் நடித்து, அதிக சம்பளத்தை பெறும் நடிகர் என்பதால், இந்த தகவல் உண்மையாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

துணிவு ஷூட்டிங் : அது அஜித் சாரா? சென்னையில் குவிந்த கூட்டம்... ஆனா நடந்த கதை வேறு!

இந்த நிலையில் ஜெட் விமானம் விவகாரம் குறித்து அக்சய்குமார் ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘சிறு குழந்தை பருவத்தில் பொய் பேசுபவர்கள் குறித்த பாடல்களை கேட்டிருப்போம். சில பேர் இன்னும் வளர்ச்சி அடையாமலேயே இருக்கிறார்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும் என்ற மன நிலையில் நான் உள்ளேன். ஜெட் விமானம் வைத்திருப்பதாக கூறப்படும் தகவலுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் கிடையாது’ என்று அக்சய் குமார் கூறியுள்ளார்.

அத்துடன் தான் ஜெட் விமானம் வைத்திருப்பதாக வந்த செய்தியை ஸ்கிரீன் ஷாட்டுடன் அக்சய் குமார் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டுள்ளது.

அக்சய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராம் சேது’ என்ற திரைப்படம் தீபாவளியையொட்டி அக்டோபர் 25 -ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் அவருடன் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நுஸ்ரத் பரூச்சா, சத்யதேவ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

6 ஆண்டுகளுக்கு முன்பே ரிஜிஸ்டர் மேரேஜ்... வாடகைத் தாய் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ராம் சேது பாலத்தை தேடி, தொல்லியல் துறை நிபுணரான அக்சய்குமார் ஆய்வில் ஈடுபடுவதுபோல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. பல சுவாரசிய காட்சிகள் நிறைந்த இந்தப் படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று அக்சய் குமார் கூறியுள்ளார்.

First published:

Tags: Akshay Kumar