• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Sooryavanshe Movie : முதல்நாள் வசூலில் முதலிடம் பிடித்த அக்ஷய் குமார் படம்..

Sooryavanshe Movie : முதல்நாள் வசூலில் முதலிடம் பிடித்த அக்ஷய் குமார் படம்..

காட்சி படம்

காட்சி படம்

Akshay Kumar : இந்தியாவில் முதல்நாளில் சூர்யாவான்ஷி படம் 26.29 கோடிகளை வசூலித்திருப்பதாக அறிவித்துள்ளனர்.

  • Share this:
    கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் இந்தியில் வெளியான பெரிய படம் பெல்பாட்டம். அக்ஷய் குமார் நடித்த இந்தப் படம் வெளியான போது மகாராஷ்ட்ரா உள்பட பல மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. அதனால் மிகக்குறைவான வசூலையே படம் பெற்றது.

    அடுத்து வெளியான தலைவி படம் அதைவிட மோசமாக தோற்றது. தற்போது மகாராஷ்ட்ரா உள்பட அனைத்து மாநிலங்களிலும் திரையரங்குகள் இயங்குகின்றன. சில மாநிலங்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். பிவிஆர், ஐநாக்ஸ் போன்ற மல்டிபிளக்ஸ்களுடன் வசூலை பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட முரண்பாடு நேற்று முன்தினம் இரவு சமரசத்துக்கு வந்ததைத் தொடர்ந்து நேற்று இந்தியா முழுவதும் அக்ஷய் குமார் நடித்த சூரியவான்ஷி படம் வெளியானது. இந்தியாவுக்கு வெளியே சுமார் 66 நாடுகளில் படத்தை வெளியிட்டுள்ளனர்



    இந்தியாவில் முதல்நாளில் படம் 26.29 கோடிகளை படம் வசூலித்திருப்பதாக அறிவித்துள்ளனர். இது அட்டகாசமான வசூல். இந்த வருடம் வெளியான இந்திப் படங்களில் முதல்நாள் வசூலில் இதுவே டாப். மகாராஷ்ட்ரா, பீகார், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில், இப்படியொரு வசூல் நிச்சயம் அதிகம்தான் என பாலிவுட் மகிழ்கிறது

    also read : எனிமி படத்தின் வசூல் இத்தனை கோடிகள்தானா?

    சூரியவான்ஷி படம் ரோஹித் ஷெட்டியின் காப் ட்ரையாலஜியின் மூன்றாவது படம். முதலில் தமிழ் சிங்கம் படத்தை அதே பெயரில் அஜய்தேவ் கானை வைத்து எடுத்தார். அடுத்து ரன்வீர் சிங்கை வைத்து தெலுங்கு டெம்பரை சிம்பா என்ற பெயரில் இயக்கினார். இரண்டுமே பம்பர்ஹிட். இப்போது அக்ஷய் குமாரை வைத்து அடுத்த காப் திரைப்படம். இதுவும் வெற்றியை முழு வலிமையுடன் பதிவு செய்திருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: