• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஜகமே தந்திரத்தைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகும் தனுஷ் படம்!

ஜகமே தந்திரத்தைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகும் தனுஷ் படம்!

தனுஷுடன் அக்ஷய் குமார், சாரா அலிகான்

தனுஷுடன் அக்ஷய் குமார், சாரா அலிகான்

ராஞ்சனா, தனு வெட்ஸ் மனு படங்களின் கதாசிரியர் ஹிமன்ஸு சர்மா படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார். ரஹ்மான் இசை. தனுஷுடன் அக்ஷய் குமார், சாரா அலிகான் நடித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் படங்களில் ஒன்று அனேகமாக நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியாகலாம் என்கின்றன தகவல்கள்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் திரையரங்குகள் மூடப்பட ஓடிடி தளங்கள் இந்திய சந்தையில் ஆழமாக வேரூன்றின. திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்பும் அதிக திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன.

சின்ன பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி ஸ்டார் நடிகர்களின் படங்களும் அவ்வப்போது நேரடியாக ஓடிடியில் வெளியாகி திரையரங்குகளுக்கு அதிர்ச்சியளித்து வருகிறது. தனுஷின் ஜகமே தந்திரமும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது

தனுஷ் நடிப்பில் ஹாலிவுட் படமான க்ரே மேனும், இந்திப் படம் அத்ரங்கி ரேயும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. தற்போது மாறன், திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து வருகிறார். அடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இதில் அத்ரங்கி ரே திரைப்படத்தை ஓடிடியில் நேரடியாக வெளியிட நெட்பிளிக்ஸுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ராஞ்சனா படத்தின் மூலம் தனுஷை இந்தியில் அறிமுகப்படுத்திய ஆனந்த் எல்.ராய் அத்ரங்கி ரேயை இயக்கியுள்ளார்.

Also read... சீனுராமசாமியின் இடிமுழக்கம் மலையாளப் படத்தின் ரீமேக்கா?

ராஞ்சனா, தனு வெட்ஸ் மனு படங்களின் கதாசிரியர் ஹிமன்ஸு சர்மா படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார். ரஹ்மான் இசை. தனுஷுடன் அக்ஷய் குமார், சாரா அலிகான் நடித்துள்ளனர்.

இத்தனை பிரபலங்கள் இருந்தும் படத்தை ஓடிடியில் வெளியிடுவது என முடிவெடுத்துள்ளனர். விரைவில் அது குறித்தான அறிவிப்பு வரலாம். தனுஷின் ஹாலிவுட் படம் க்ரே மேனும் ஓடிடியில்தான் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: