முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / செல்ஃபி எடுப்பதில் கின்னஸ் சாதனை படைத்த நடிகர் அக்சய் குமார்!

செல்ஃபி எடுப்பதில் கின்னஸ் சாதனை படைத்த நடிகர் அக்சய் குமார்!

நடிகர் அக்சய் குமார்

நடிகர் அக்சய் குமார்

2018-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ் ஸ்மித் என்பவர் 3 நிமிடங்களில் எடுத்த 168 செல்ஃபி புகைப்படங்கள் எடுத்ததே முதலிடத்தில் இருந்த நிலையில், அதனை அக்சய் குமார் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாலிவுட் நடிகர் அக்சய் குமார், செல்ஃபி புகைப்படம் எடுப்பதில் அமெரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ் ஸ்மித் என்பவரின் சாதனையை முறியடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ராஜ் மேத்தா இயக்கத்தில் அக்‌ஷய் குமார், இம்ரான் ஹாஷ்மி, நுஷ்ரத் பருச்சா, டயானா பென்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘செல்ஃபி’. தர்மா புரொடக்ஷனுடன், பிரித்விராஜ் புரொடக்ஷன் இணைந்து தயாரிக்கும் இப்படம் பிப்ரவரி 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ‘டிரைவிங் லைசன்ஸ்’ படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாகியுள்ளது. மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த இந்தப் படம் ஹிந்தியில் ஹிட் அடிக்கும் என்றும் படக்குழு எதிர்பார்த்துள்ளது.

இந்நிலையில், அக்சய் குமார் நடிப்பில் இந்தியில் உருவான ‘செல்ஃபி’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் 3 நிமிடங்களில் 184 செல்ஃபி புகைப்படங்கள் எடுத்து அக்சய் குமார் புதிய சாதனை படைத்தார். அவருக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்போது ரசிகர்களுடன் ஆட்டம் போட்டு மகிழ்ந்தார்.
 
View this post on Instagram

 

A post shared by Akshay Kumar (@akshaykumar)முன்னதாக 2018-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ் ஸ்மித் என்பவர் 3 நிமிடங்களில் எடுத்த 168 செல்ஃபி புகைப்படங்கள் எடுத்ததே முதலிடத்தில் இருந்த நிலையில், அதனை அக்சய் குமார் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Akshay Kumar