Bell Bottom: திரையரங்கில் 3டி யில் வெளியாகும் அக்ஷய் குமாரின் பெல்பாட்டம்!

பெல் பாட்டம்

கொரோனா ஊரடங்குக்குப் பின் இந்தியில் வெளியாகும் முதல் பிரமாண்ட படம் பெல்பாட்டம்.

  • Share this:
    அக்ஷய் குமார் நடித்திருக்கும் பெல்பாட்டம் ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியாகும் நிலையில், 3டியில் படத்தை கண்டு ரசிக்கலாம் என இன்று அறிவித்துள்ளனர்.

    பெல்பாட்டம் அக்ஷய் குமார், வாணி கபூர், ஹூமா குரோஷி, லாரா தத்தா நடித்திருக்கும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம். ரஞ்சிம் எம்.திவாரி இயக்கியுள்ளார். இந்தப் படம் கொரோனா ஊரடங்கால் ஓடிடியில் வெளியாகும் என தயாரிப்பாளரால் முதலில் சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து சில சர்ச்சைகள் எழ, படம், திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என குழப்பத்துக்கு அக்ஷய் முற்றுப்புள்ளி வைத்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோன இரண்டாம் அலை பெருவாரியான மாநிலங்களில் கட்டுக்குள் வந்திருப்பதால், ஆகஸ்ட் 19-ம் தேதி பெல்பாட்டத்தை திரையரங்கில் வெளியிடுவது என முடிவு செய்து முறைப்படி அறிவித்தனர். அக்ஷய் நடித்திருந்தாலும் கொரோனா பயத்தில் மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்ற சந்தேகம் தயாரிப்பாளர்களுக்கு இருந்திருக்கும்போல. ரசிகர்களை ஈர்க்க, படத்தை 3டியில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

    கொரோனா ஊரடங்குக்குப் பின் இந்தியில் வெளியாகும் முதல் பிரமாண்ட படம் பெல்பாட்டம். அதற்கு கிடைக்கும் ஆதரவைப் பொறுத்து தங்கள் படங்களை திரையில் வெளியிடுவதா இல்லை ஓடிடி பக்கம் நழுவுவதா என்பதை முடிவு செய்ய இரண்டு டஜன் தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். பெல்பாட்டத்தின் வெற்றி இந்தித்திரையுலகுக்கு முக்கியமானது. வெற்றிக்கு மைலேஜ் சேர்ப்பதாக உள்ளது இன்றைய 3டி அறிவிப்பு.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: