Akshay Kumar: தொடங்கியது அக்‌ஷய் குமாரின் பெல் பாட்டம் கொண்டாட்டம்!

பெல் பாட்டம் படக்குழுவினரின் கொண்டாட்டம்

அக்ஷய் குமார் நடித்திருக்கும் பெல் பாட்டம் திரைப்படத்தின் விளம்பர வேலைகள் நேற்றுடன் தொடங்கியது.

  • Share this:
    அக்ஷய் குமார் நடித்திருக்கும் பெல் பாட்டம் திரைப்படத்தின் விளம்பர வேலைகள் நேற்றுடன் தொடங்கியது.

    அக்ஷய் குமார் நடித்திருக்கும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் பெல் பாட்டம். ரஞ்சித் எம்.திவாரி இயக்கியிருக்கும் இந்தப் படம் கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்ட படங்களில் ஒன்று, இரண்டாம் அலை இப்போதைக்கு ஓயாதோ என்ற கவலையில் படத்தின் தயாரிப்பாளர் ஓடிடியில் படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடத்தினார். அக்ஷய் குமாரின் சம்பளத்தில் 30 சதவீதத்தை குறைக்கவும் கேட்டுக் கொண்டார். இந்தத் தகவல்கள் மீடியாவில் வெளிவர, டென்ஷனான அக்ஷய் குமார், படம் திரையரங்கில்தான் வெளியாகும் என்றார். ஹீரோவே சொன்ன பிறகு அப்பீல் ஏது?

    தயாரிப்பாளர் அவசர அவசரமாக ஜுலை 27-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்தனர். திரையரங்குகள் திறக்கப்படும் போது முதல் பெரிய படமாக பெல் பாட்டம் வெளியாகும் என்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் ஹேப்பி. ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நேற்று படத்தை அக்ஷய் குமார் மற்றும் படத்தில் நடித்திருக்கும் வாணி கபூர், லாரா தத்தா, ஹூமா குரோஷி ஆகியோர் பார்த்தனர். படம் பார்த்த மகிழ்ச்சியில் எடுத்துக் கொண்ட செல்பியை ஹூமா குரோஷி இணையத்தில் வெளியிட்டார். அத்துடன் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியும் முடுக்கி விடப்பட்டிருக்கிறது.

    பெல் பாட்டம் தவிர சூரியவன்ஷி, அத்ரங்கி ரே, பிருத்விராஜ் ஆகிய படங்களும் இந்த வருடம் அக்ஷய் நடிப்பில் வெளியாக உள்ளன. இவை தவிர, பச்சான் பாண்டே, ராம் சேது, ரக்ஷா பந்தன் ஆகிய படங்களிலும் அவர் நடித்து வருகிறார். உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 5 நடிகர்களில் அக்ஷயும் ஒருவர். ஏன் என்பது இந்தப் பட்டியலைப் பார்த்தாலே புரிந்துவிடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: