• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிருத்விராஜின் டிரைவிங் லைசென்ஸ் ரீமேக்கில் நடிக்கும் அக்ஷய் குமார்!

பிருத்விராஜின் டிரைவிங் லைசென்ஸ் ரீமேக்கில் நடிக்கும் அக்ஷய் குமார்!

டிரைவிங் லைசென்ஸ்

டிரைவிங் லைசென்ஸ்

மலையாளத்தில் வெற்றி பெற்ற இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் பிருத்விராரி வேடத்தில் அக்ஷய் குமாரும், சுராரி வெஞ்சாரமூடு கதாபாத்திரத்தில் எம்ரான் ஹஸ்மியும் நடிக்க உள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிருத்விராஜ், சுராஜ் வெஞ்சாரமூடு நடிப்பில் 2019 இல் வெளியான மலையாளப் படம் டிரைவிங் லைசென்ஸ். இதன் இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடிக்கிறார்.

இந்திய சினிமாவில் வருடத்துக்கு நான்குப் படங்களுக்கு குறையாமல் நடிக்கும் ஒரே முன்னணி மாஸ் நடிகர் அக்ஷய் குமார். இதற்கு பெரிதும் துணையாக இருப்பது பிற மொழிப்படங்கள். குறிப்பாக தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்கள்.

இந்த மொழிகளில் வெற்றி பெற்ற படங்கள் அக்ஷய் குமார் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்படும். குறிப்பாக மலையாளத்திலிருந்து அதிக படங்கள் அக்ஷய் குமார் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன.

மம்முட்டி, பிருத்விராஜ் நடித்த போக்கிரிராஜா, சித்திக், லால் இணைந்து இயக்கிய ராம்ஜிராவ் ஸ்பீக்கிங், முகேஷ் நடித்த மாட்டுப்பட்டி மச்சான், ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த வெள்ளானைகளுடெ நாடு, பாசிலின் மணிச்சித்திரதாழ், மோகன்லால், முகேஷ் இணைந்து நடித்த போயிங் போயிங் ஆகியவை மலையாளத்திலிருந்து இந்தியில் அக்ஷய் குமார் நடித்த ரீமேக்குகளில் சில. தற்போது டிரைவிங் லைசென்ஸ் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

Also read... விஜய் சேதுபதி படத்தின் புதிய நாயகி அனுகீர்த்தி - புகைப்படங்கள்!

டிரைவிங் லைசென்ஸை நடிகர் லாலின் மகன் லால் ஜுனியர் இயக்கியிருந்தார். அய்யப்பனும் கோஷியும் படத்தின் இயக்குனர் சாச்சி படத்தின் கதை, திரைக்கதையை எழுதினார். இதில் பிருத்விராஜ் முன்னணி நடிகராகவும், அவரது தீவிர ரசிகர் மற்றும் ஆர்டிஓ அலுவலக அதிகாரியாக சுராஜ் வெஞ்சாரமூடும் நடித்திருந்தனர்.

மலையாளத்தில் வெற்றி பெற்ற இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் பிருத்விராஜின் வேடத்தில் அக்ஷய் குமாரும், சுராரி வெஞ்சாரமூடு கதாபாத்திரத்தில் எம்ரான் ஹஸ்மியும் நடிக்க உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: