அஜித்தை அடுத்து விஜய் பட ரீமேக்கில் அக்‌ஷய்குமார்!

news18
Updated: July 31, 2019, 6:01 PM IST
அஜித்தை அடுத்து விஜய் பட ரீமேக்கில் அக்‌ஷய்குமார்!
அக்‌ஷய்குமார் | விஜய்
news18
Updated: July 31, 2019, 6:01 PM IST
‘வீரம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வரும் அக்‌ஷய்குமார், ‘கத்தி’ படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அக்‌ஷய்குமார். ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் நடித்திருந்த இவர், காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக், வீரம் படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.

வீரம் படத்தின் இந்தி ரீமேக்குக்கு பச்சன் பாண்டே என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில், கருப்பு லுங்கி, கழுத்தில் தங்கச் சங்கிலிகள், கையில் நுன்சாக் ஆயுதத்துடன் தோன்றியுள்ளார் நடிகர் அக்‌ஷய்குமார். இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
வீரம் படத்தை அடுத்து விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த கத்தி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கத்தி படத்தில் சமந்தா நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி பாலிவுட் நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தப் படத்துக்கு ’இக்கா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பார்த்து சிரிக்க: லோ பட்ஜட் தல, தளபதி..! வைரலாகும் பிக்பாஸ் மீம்ஸ்

Loading...வீடியோ பார்க்க: கடத்தப்பட்டாரா தமிழ் நடிகை?

First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...