Akshara Haasan: கமலின் பிரச்சார வாகனத்தில் டார்ச் லைட்டுடன் அக்‌ஷரா ஹாசன்!

Akshara Haasan: கமலின் பிரச்சார வாகனத்தில் டார்ச் லைட்டுடன் அக்‌ஷரா ஹாசன்!

கமலுடன் அக்‌ஷரா ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனின் பிரச்சார வாகனத்தில் அவரது இளையமகள் அக்‌ஷரா ஹாசன் டார்ச் லைட்டுடன் நின்றிருந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

  • Share this:
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனின் பிரச்சார வாகனத்தில் அவரது இளையமகள் அக்‌ஷரா ஹாசன் டார்ச் லைட்டுடன் நின்றிருந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக-வுக்கு மாற்றாக கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், சீமானின் நாம் தமிழர் ஆகியக் கட்சிகள் களம் காண்கின்றன. இதில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியுடன் இணைந்து நடிகர் கமல் இத்தேர்தலை சந்திக்கிறார்.

Thalapathy 65: தளபதி 65-ல் விஜய்யுடன் நடிப்பதை உறுதிப்படுத்திய இன்னொரு இளம் நடிகை!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருந்த கமல், சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது கோவையிலும் மற்ற தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் கமல். இந்நிலையில் அப்பாவுடன் பிரச்சார வாகனத்தில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் கமலின் இளையமகள் அக்‌ஷரா ஹாசன்.



”என் அப்பா, ஒரு உண்மையான போராளி. அவர் விரும்பியதைச் செய்ய, எல்லா வகையான வலிகளைக் கடந்தும் போராடுகிறார்” என்று குறிப்பிட்டு அந்தப் படங்களை வெளியிட்டிருக்கிறார் அக்‌ஷரா. இதற்கிடையே தனது வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என கமல் கூறி வந்த நிலையில், தற்போது பிரச்சார வாகனத்தில் அக்‌ஷரா இருப்பது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தவிர, கமல் போட்டியிடும் கோவை தெற்கில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரும், அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: