மாஸ்டர் படத் தயாரிப்பாளரின் அடுத்த படம் அறிவிப்பு

விஜய் உடன் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ

மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகிறார்.

  • Share this:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்தார். 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான இத்திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளுக்கு புத்துயிர் அளித்தது மாஸ்டர்.

இந்நிலையில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் இது. பன்முகதிறமை வாய்ந்த இயக்குநர் விஷ்ணு வரதனுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நடிகர் முரளியின் மகனும் அதர்வா முரளியின் இளைய சகோதரரான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகி நடிக்கிறார். இத்திரைப்படம் சம்பந்தப்பட்ட இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகளுமான சினேகா பிரிட்டோவுக்கும் ஆகாஷூக்கும் சிங்கப்பூரில் படித்துக் கொண்டிருந்த போது காதல் மலர்ந்ததாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து 2019-ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: