Home /News /entertainment /

நன்றி அஜித் சார்... ஏகே 62 இயக்குநர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!

நன்றி அஜித் சார்... ஏகே 62 இயக்குநர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!

விக்னேஷ் சிவன் - அஜித்

விக்னேஷ் சிவன் - அஜித்

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கும் 'ஏகே 62' படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார் அஜித்.

    நடிகர் அஜித் சினிமாவில் நடிக்க வந்து 30 ஆண்டுகளைக் கடந்திருக்கிறார். இதை இணையத்தில் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவனும் அஜித்துக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார் தற்போது 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஏகே 61' படத்தின் எஞ்சிய பகுதிகளின் படப்பிடிப்பில் தற்போது பிஸியாக உள்ளார் அஜித். வங்கி கொள்ளையை அடிப்படையாகக் கொண்ட ஆக்‌ஷன் அட்வென்ச்சர் படமான இது, இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே 2022-ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில், லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கும் 'ஏகே 62' படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார் அஜித். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.



    நிச்சயதார்த்தம் நடந்து இரண்டரை ஆண்டுகள்... விஜயகாந்த் மகனின் திருமணம் ஏன் இன்னும் நடக்கவில்லை?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் அஜித்தின் 30 ஆண்டுகால திரைப்பயணத்தை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், “முப்பது வருட தன்னம்பிக்கை, ஆர்வம், கருணை, பணிவு, விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இந்த மனிதனை 30 ஆண்டுகளாக மக்களின் இதயங்களை ஆள வைத்துள்ளது! இன்னும் பல வருடங்கள் உங்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் இருக்க நாங்கள் பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறோம்! நன்றி டியர் அஜித் சார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Ajith, Vignesh Shivan

    அடுத்த செய்தி