அஜித் நடிக்கும் அடுத்த படமான ஏகே 61 ஷூட்டிங் இன்று தொடங்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் #AK61 மற்றும் #AK61startstoday என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.
#AK61startstoday என்ற ஹேஷ்டேக்கின் கீழ் ரசிகர்கள் தாங்கள் உருவாக்கிய போஸ்டர்களை பதிவிட்டு வருகின்றனர். இவை ரசிக்கும்படியாகவும், படத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கின்றன.
முந்தைய படங்களைப் போல் இல்லாமல் ஏகே61 படத்தை விறுவிறுவென முடித்து தீபாவளிக்கு களத்தில் இறக்குவதற்கு போனிகபூர், எச்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
நெகடிவ் கேரக்டர், 2 வேடம், 5 வேடம், எடை குறைந்த அஜித் என படம் குறித்து இதுவரை வெளிவந்த தகவல்கள் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளன.
இதையும் படிங்க - திருமணம் பற்றி கேட்ட கேள்விக்கு சைகையில் பதில் சொன்ன பாக்கியலெட்சுமி ரித்திகா.!
ஏகே 61 படத்திற்கான செட், ஐதராபாத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை மவுன்ட் ரோட்டைப் போன்ற செட்டை படக்குழுவினர் ஏற்படுத்தியுள்ளனர்.
வங்கி மோசடி தொடர்பான காட்சிகள் படத்தில் முக்கியமாக இடம்பெறக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பான் இந்தியா படமாக உருவாக்குவதற்கு படக்குழுவினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். வலிமை படம் இந்தியில் பவர் என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க - Beast: இதுக்கா முதல்வரை சந்திச்சீங்க? விஜய்யை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்!
ஏகே61-ல் வலிமை படத்திற்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா இடம்பெற்றுள்ளார். ஜிப்ரான் இசையமைக்கிறார். தபு, ஐஷ்வர்யா ராய் என ஹீரோயின் யார் என்பது குறித்து தகவல்கள் பரவினாலும், அதுகுறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் ஒருவர் இந்த படத்தில் இடம்பெறலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.