ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

AK62 : அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா விக்னேஷ் சிவன்?

AK62 : அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா விக்னேஷ் சிவன்?

விக்னேஷ் சிவன் - அஜித்

விக்னேஷ் சிவன் - அஜித்

AK 62 Vignesh Shivan : கேஜிஎஃப் 2, புஷ்பா, ஆர்ஆர்ஆர், விக்ரம் படங்களுக்கு பின்னர் தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அஜித்தின் 61வது படத்தை இயக்கும் பொறுப்பு விக்னேஷ் சிவனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கேஜிஎஃப் 2, ஆர்ஆர்ஆர், விக்ரம் படங்களுக்கு பின்னர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன் மடங்கு உயர்ந்திருக்கும் நிலையில் அதனை விக்னேஷ் சிவன் நிறைவேற்றுவாரா என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

என்னை அறிந்தால் படத்தில் அதாரு அதாரு, வலிமையில் நாங்க வேற மாறி ஆகிய மாஸ் பாடல்களை விக்னேஷ் சிவன் அஜித்துக்கு எழுதியுள்ளார். தானா சேர்ந்த கூட்டம், நானும் ரவுடிதான், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய வெற்றிப் படங்களுக்கு பின்னர், அஜித்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ்க்கு கிடைத்துள்ளது.

காதல், ரொமான்டிக், காமெடி காட்சிகள்தான் விக்னேஷின் பலமாக அறியப்படுகிறது. சண்டைக் காட்சிகள் இருந்தாலும் அதிலும் ஹியூமர் சென்சை புகுத்தி ரசிகர்களை ரசிக்க வைத்திருப்பார் விக்னேஷ். தானா சேர்ந்த கூட்டம், நானும் ரவுடிதான், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களில் வரும் சண்டை காட்சிகளை உதாரணமாக சொல்லலாம்.

இதையும் படிங்க - Vignesh shivan : நயன்தாராவை கல்யாணம் செய்ய போகும் விக்கி உண்மையில் இப்படிப்பட்டவரா?

வாழ்க்கையைப் பற்றி பாடம் எடுப்பதிலும் விக்னேஷ் சிவன் மாஸ்டர்தான். தனது ஒவ்வொரு படத்திலும், வாழ்க்கையை மிகவும் பாசிட்டிவாக, கவிதைபோல் அழகாக சொல்லி காட்சிகளை செதுக்கியிருப்பார்.

இதுவரை இயக்கிய படங்களின் அடிப்படையில் காமெடி என்டர்டெய்னராகவே விக்னேஷ் சிவன் அறியப்படுகிறார். ஆனால் அஜித் ரசிகர்கள் பெரும்பாலும் அவரிடம் எதிர்பார்ப்பது முழு நீள மாஸ் திரைப்படம்தான்.

அதிலும் கேஜிஎஃப் 2, புஷ்பா, ஆர்ஆர்ஆர், விக்ரம் படங்களுக்கு பின்னர் தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க - கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாரை கரம் பிடிக்கும் விக்னேஷ் சிவன்… யார் இவர்?

வலிமை சற்று சறுக்கலை சந்தித்துள்ளதால் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குனர் எச்.வினோத் ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி வருகிறார். இதனால், இந்த படத்தையும் மிஞ்சும் வகையில் விக்னேஷ் சிவனின் படம் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

அஜித்தையும், அவர் சம்பந்தமான காட்சிகள், அவரது ரசிகர்களுக்கு பிடித்த காட்சிகள் எல்லாம் விக்னேஷ் சிவனுக்கு மிகவும் புதியது என்பதால் இந்த சவாலை சிறப்பாக அவர் முடிப்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

First published:

Tags: Ajith, Vignesh Shivan