அஜித்தின் 51-வது பிறந்த நாளையொட்டி அவர் நடிப்பில் உருவாகி வரும் ஏகே 61 படத்தின் டைட்டில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த படம் தொடர்பான புதிய தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24-ம்தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது. கலவை விமர்சனங்கள் ஏற்பட்டாலும் பெரும்பாலான சினிமா ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் படம் அமைந்திருந்தது.
இதையடுத்து பெயரிடப்படாத புதிய படத்தில் அஜித் நடித்து வருகிறார். இதனை ஏகே 61 என்று அழைக்கிறார்கள். படத்தில் ஹீரோ - வில்லன் என டபுள் ரோலில் அஜித் வருகிறார். எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் வங்கி கொள்ளையை மையமாக கொண்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க - Actress Tamannah Bhatia : நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வைரல்..
வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில நடித்த ரகுல் ப்ரீத் சிங் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோயின் கேரக்டரில் நடிப்பதற்கு அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்த தபுவிடம் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம்தேதியை முன்னிட்டு ஏகே61 படத்தின் டைட்டில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க - புஷ்பா பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட விராட் கோலி... இன்ஸ்டாவில் பதிவிட்ட சமந்தா
ஏகே. 61 படத்திற்காக மொத்தம் 60 நாட்கள் கால்ஷீட்டை அஜித் கொடுத்துள்ளார். படப்பிடிப்பை விறுவிறுவென முடித்து விட்டு தீபாவளிக்கு திரைக் களத்தில் இறக்க படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
ஏப்ரல் 30-ம்தேதி மாலை டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புள்ளது. ஏற்கனவே நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை எச். வினோத் இயக்கியிருந்தார். தயாரிப்பாளர் போனிகபூர், அஜித், எச்.வினோத் கூட்டணியில் 3வது படமாக ஏகே 61 உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.