Home /News /entertainment /

அஜித்துக்கு வில்லனாக நடிக்கிறாரா 'சார்பட்டா' வேம்புலி?

அஜித்துக்கு வில்லனாக நடிக்கிறாரா 'சார்பட்டா' வேம்புலி?

சார்பட்டா பரம்பரையில் வேம்புலியாக நடித்த ஜான் கோக்கன்

சார்பட்டா பரம்பரையில் வேம்புலியாக நடித்த ஜான் கோக்கன்

தீவிர அஜித் ரசிகரான ஜான் கோக்கன், தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கனவு நனவாகும் நாள் வந்து விட்டதென பதிவிட்டுள்ளார்.

எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் அஜித்தின் 61-வது படத்தில் அவருக்கு வில்லன்களில் ஒருவராக நடிகர் ஜான் கோக்கன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வலிமை படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி அஜித்தின் 61-வது படத்தில் இணைந்துள்ளது. எச். வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹீரோ, வில்லன் என 2 வேடத்தில் அஜித் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித்துக்கு ஜோடியாக அசுரன் படத்தில் ரசிகர்களை கவர்ந்த மஞ்சு வாரியர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மெகா ஹிட்டான 'மனி ஹெய்ஸ்ட்' வெப்சீரிஸைப் போன்ற கதையம்சம் கொண்டதாக ஏகே 61 உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க - கே.ஜி.எஃப் 2 படத்தை பார்த்து ரசித்த இசைஞானியும் கலைஞானியும்!

 

இதையொட்டி சென்னை மவுன்ட் ரோட்டை போன்ற பிரமாண்ட செட், ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். கிரைம் சப்ஜெக்ட்டில் எச்.வினோத் மாஸ்டர் என்பதால், ஏகே 61 வேற லெவலில் இருக்கும் என்று சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் படத்தில் அஜித்துக்கு வில்லன்களில் ஒருவராக சார்பட்டா பரம்பரையில் ரசிகர்களை பெரும் வரவேற்பை பெற்றவரும் வேம்புலி கேரக்டரில் நடித்தவருமான ஜான் கோக்கன் இடம்பெறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க - வாலி படத்தின் ரிமேக்கிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு... எஸ்.ஜே.சூர்யா மனு தள்ளுபடி

தீவிர அஜித் ரசிகரான ஜான் கோக்கன், தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கனவு நனவாகும் நாள் வந்து விட்டதென பதிவிட்டுள்ளார். இதற்கான காரணத்தை சொல்ல முடியுமா என்றும் அவர் ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.


இதன் மூலம் அவர் படத்தில் இடம்பெறுவது உறுதியாகிவிட்டதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஏகே 61 படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படக்குழுவினர் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர்.
Published by:Musthak
First published:

Tags: Actor Ajith

அடுத்த செய்தி