Home /News /entertainment /

ஏகே. 61 படத்திற்காக மீண்டும் கெட்அப்பை மாற்றப் போகும் அஜித்!!

ஏகே. 61 படத்திற்காக மீண்டும் கெட்அப்பை மாற்றப் போகும் அஜித்!!

அஜித்

அஜித்

AK 61 Update : ஏகே 61 படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஏகே 61 படத்திற்காக அஜித் தனது கெட்அப்பை மீண்டும் மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் 2 கேரக்டர்களில் அவர் நடிப்பதாக கூறப்படும் நிலையில், ஒரே தோற்றத்தில்தான் இதுவரை நடித்து வந்துள்ளார்.

    தற்போது பிரிட்டனில் சுற்றுலா மேற்கொண்டுள்ள அஜித், விரைவில் படப்பிடிப்பில் இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் வெளிவந்த வலிமை படத்தின் மீது, மிகப் பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது. இருப்பினும் இந்தப் படம் பெரும்பாலானோரை திருப்திப்படுத்தவில்லை.  கலவை விமர்சனங்களே இப்படத்திற்கு கிடைத்தன.

    இந்த நிலையில் எச் வினோத் – அஜித் - போனி கபூர் கூட்டணி தொடர்ச்சியாக 3வது முறையாக ஏகே 61 படத்தில் இணைந்துள்ளது. வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு, இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க - திருமணத்திற்கு தயாரான ஹரிஷ் கல்யாண்... மணப்பெண் யார் தெரியுமா?

    இதில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். படத்தில் அஜித் சம்பந்தமான பெரும்பாலான காட்சிகள் சூட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.  இதில் இரண்டு வேடங்களில் அவர் நடிப்பார் என்று கூறப்படும் நிலையில் இதுவரை ஒரே கெட்டப்பில் மட்டுமே படப்பிடிப்பில் அஜித் பங்கேற்றார்.

    இந்நிலையில் இன்னொரு கேரக்டருக்காக தனது தோற்றத்தை அடுத்து விரைவில் மாற்றி அஜித் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு! 

    ஏகே 61 படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் ஒரு சில காரணங்களுக்காக டிசம்பர் மாதத்திற்கு வெளியீடு தள்ளிப் போகும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Ajith

    அடுத்த செய்தி