முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அஜித் நடிக்கும் AK 61 படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் நிறைவு… திட்டமிட்டபடி தீபாவளிக்கு ரிலீஸ்

அஜித் நடிக்கும் AK 61 படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் நிறைவு… திட்டமிட்டபடி தீபாவளிக்கு ரிலீஸ்

முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துச் செல்லும் அஜித்.

முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துச் செல்லும் அஜித்.

AK 61 Update : கடந்த மே 1ம் தேதி இந்தப் படம் தொடர்பான டைட்டில் அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அஜித் நடிக்கும் ஏகே 61 படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் நிறைவுபெற்றுள்ளது. இந்த படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வலிமை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. முதலில் சில காட்சிகளால் படத்தில் தொய்வு ஏற்பட்டாலும், 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்ட பின்னர் படம் ஜெட் வேகத்தில் பறந்தது.

தமிழில் வெளிவந்த ஆக்சன் படங்களில் வலிமை படத்திற்கு முக்கிய இடம் இருக்கும் என்பதை மறுக்க முடியாது. இதன்பின்னர், வலிமை கூட்டணியான அஜித், போனி கபூர், எச். வினோத் காம்போ அடுத்த படமான ஏகே 61-லும் இணைந்துள்ளது.

Also read... SK20 பட தலைப்பு நாளை வெளியாகிறது...! 

வங்கி கொள்ளையை மையமாக கொண்டு க்ரைம் த்ரில்லர் ஜானரில் இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது. அஜித்தின் பிறந்த நாளையொட்டி கடந்த மே 1ம் தேதி இந்தப் படம் தொடர்பான டைட்டில் அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் படக்குழுவினர் எதையும் அறிவிக்காமல் சஸ்பென்ஸை தக்க வைத்துள்ளார்கள். இடையே, அஜித்தின் லுக் மட்டும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் ஐதராபாத்தில் முதற்கட்ட ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. இங்குதான் சென்னை மவுன்ட் ரோடைப் போன்ற செட் அமைக்கப்பட்டு, வங்கி கொள்ளை தொடர்பான காட்சிகள் படம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க - இந்த ஹிட் பாடல்களை எழுதியது விக்னேஷ் சிவனா? இளம் இயக்குனரின் இன்னொரு பக்கம்

அடுத்ததாக படக்குழுவினர் புனேவில் நடைபெறவுள்ள படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளனர். இதை முடித்துக் கொண்டு சென்னையில் இறுதிக் கட்ட ஷெடூல் படமாக்கப்படவுள்ளது.

திட்டமிட்டபடி படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருவதால், தீபாவளிக்கு ஏகே 61 படம் திரைக்கு வரும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Actor Ajith, Vinoth