முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / லண்டனிலிருந்து ஒரு வாரத்தில் சென்னை திரும்புகிறார் அஜித்குமார்…

லண்டனிலிருந்து ஒரு வாரத்தில் சென்னை திரும்புகிறார் அஜித்குமார்…

நடிகர் அஜித்

நடிகர் அஜித்

AK 61 Movie update : அஜித் நடிக்கும் 61-வது படத்தில் அவர் இல்லாத காட்சிகளை சென்னையில் இயக்குநர் வினோத் படமாக்கி வருகிறார்.

  • 1-MIN READ
  • Last Updated :

லண்டன் சென்றுள்ள நடிகர் அஜித் குமார் ஒரு வாரத்தில் சென்னை திரும்புகிறார்.

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கும் அடுத்தப் படத்தில் அஜித் நடித்து வருகிறார். அதற்கான முதல்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடித்து முடித்துள்ள அஜித்குமார், லண்டன் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

அங்கு அவர் பைக் ரைடிங் சென்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகின. அதேபோல் சில நாட்களுக்கு முன்பு ஷாப்பிங் சென்ற கடையில் பெண் ஒருவருக்கு வழிவிட்ட வீடியோ ஒன்றும் வெளியானது. அதை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

வட சென்னையில் நடைபெற்று வரும் ஏ.கே. 61 படப்பிடிப்பு… வைரலாகும் எச்.வினோத் ஃபோட்டோ…

இந்த நிலையில் அஜித் நடிக்கும் 61-வது படத்தில் அவர் இல்லாத காட்சிகளை சென்னையில் இயக்குநர் வினோத் படமாக்கி வருகிறார்.

மேலும் அஜித் சென்னை திரும்பியவுடன் அந்தப் படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது. ஆனால் அவர் எப்போது சென்னை திரும்புவார் என்ற தகவல் இல்லாமல் இருந்தது.

தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியானது பொன்னியின் செல்வன் டீசர்… வியப்பில் ரசிகர்கள் 

இந்த நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் அஜித் லண்டனில் இருந்து சென்னை திரும்புகிறார் என்றும், சென்னை வந்தவுடன் ஏ.கே.-61 படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

First published:

Tags: Actor Ajith