Home /News /entertainment /

#AK61 Update - அஜித்தின் அடுத்த படத்தின் கதை இப்படித்தான் இருக்குமா?

#AK61 Update - அஜித்தின் அடுத்த படத்தின் கதை இப்படித்தான் இருக்குமா?

அஜித்தின் அடுத்த பட டைட்டில் அவரது பிறந்த நாளையொட்டி வெளியாகவுள்ளது.

அஜித்தின் அடுத்த பட டைட்டில் அவரது பிறந்த நாளையொட்டி வெளியாகவுள்ளது.

#AK61 Update | ரேஸிங் காட்சிகளில் இனியொரு படம் இப்படி வராது என்பதை சொல்லும் வகையில் வலிமை படத்தின் காட்சிகள் இருந்தன.

வலிமை படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் அடுத்த படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து அஜித் - எச்.வினோத் - போனி கபூர் கூட்டணி அடுத்த படத்திலும் இணைந்துள்ளது. இதில் யுவன் சங்கர் ராஜா மட்டும் மிஸ்ஸிங். அவருக்கு பதிலாக எச்.வினோத்துடன் தீரன் அதிகாரம் ஒன்றில் பணியாற்றிய ஜிப்ரான் #AK61 -ல் இணைந்துள்ளார். தற்போது ஐதராபாத்தில் ஏகே 61 படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. சென்னை மவுன்ட் ரோடைப் போன்று செட் அமைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தில் வங்கி மோசடி குறித்த காட்சிகள் முக்கிய இடத்தை பெறும் என்று ஷூட்டிங் வட்டாரங்கள் கூறுகின்றன. இதுதான் தீம் என்று சொல்ல முடியாவிட்டாலும் வங்கி மோசடி, வங்கி சம்பந்தமான காட்சிகள் முக்கிய இடத்தை பெறலாம். அஜித்திற்கு இந்த படத்தில் இரட்டை வேடம் என்று ஒரு தகவலும், 5 வேடத்தில் வந்து மிரட்டப்போவதாக இன்னொரு தகவலும் வெளிவந்துள்ளது. இதற்காக இயக்குனர் எச்.வினோத், அனைத்து டீடெய்லையும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிங்க - Beast Mode: திரை தீ பிடிக்கும்... ஒருத்தன் வந்தா படை நடுங்கும்... பீஸ்ட் 3-வது பாடல்!

ரேஸிங் காட்சிகளில் இனியொரு படம் இப்படி வராது என்பதை சொல்லும் வகையில் வலிமை படத்தின் காட்சிகள் இருந்தன. இதேபோன்று ஏகே 61 படத்திலும் தான் எடுத்துக் கொண்ட கதைக் களத்தில் இயக்குன் எச்.வினோத் உச்சத்தை தொடுவார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வலிமை படத்திற்கு தொடக்கத்தில் நெகடிவான கமென்ட்டுகள் வந்தன. ஆனால், அவற்றையெல்லாம் புறம்தள்ளி 25 நாட்களுக்கும் மேலாக பல திரையரங்குகளில் படம் ஓடியது. தியேட்டர்களில் மட்டும் வலிமை ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜீ5 ஓடிடி தளத்திலும் வலிமை சாதனை படைத்து வருகிறது.
Published by:Musthak
First published:

Tags: Actor Ajith

அடுத்த செய்தி