தமிழ்நாட்டில் விஸ்வாசம், வெளிநாடுகளில் பேட்ட... பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் ரஜினி, அஜித்

விஸ்வாசம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் அஜித் பட வரலாற்றில் அதிகம் வசூல் செய்த படமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

News18 Tamil
Updated: January 11, 2019, 8:06 PM IST
தமிழ்நாட்டில் விஸ்வாசம், வெளிநாடுகளில் பேட்ட... பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் ரஜினி, அஜித்
ரஜினிகாந்த், அஜித்
News18 Tamil
Updated: January 11, 2019, 8:06 PM IST
விஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றன.

பொங்கல் விருந்தாக நேற்று ரஜினி நடிப்பில் பேட்ட படமும் அஜித் நடிப்பில் விஸ்வாசம் படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபீஸிலும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் கிராமத்து கதையில் நடித்திருப்பதாலும் ரஜினி மீண்டும் தன் பழைய பாணிக்கு திரும்பி இருப்பதாலும் இரண்டு படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ajith, அஜித்

பாக்ஸ் ஆபீஸ் வசூலை பொறுத்தவரை இரண்டு படங்களுமே சக்கப்போடு போட்டு வருகின்றன. இரண்டு பெரிய நட்சத்திரங்கள் மோதிக்கொண்டதால் இருவருமே தங்களது முந்தைய படங்களின் வசூல் சாதனையை முறியடிக்கத் தவறியுள்ளனர். தமிழகத்தில் சுமார் 1000 திரையரங்குகள் உள்ள நிலையில் இரண்டு படங்களுக்குமே சரிவிகிதத்தில் திரையரங்குகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.

Rajinikanth

முதல்நாள் வசூலிலை பொறுத்த வரை தமிழகத்தில் பேட்ட படத்தை விட விஸ்வாசம் அதிகம் வசூல் செய்திருப்பதாகவும், தமிழகம் தவிர மற்ற இடங்களில் விஸ்வாசம் படத்தை விட பேட்ட படம் அதிகம் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Loading...
சென்னையை பொறுத்தவரை பேட்ட திரைப்படம் ரூ. 1 கோடியே 12 லட்சமும் விஸ்வாசம் திரைப்படம் ரூ. 88 லட்சமும் வசூல் செய்திருந்தாலும் தங்களின் முந்தைய படங்களின் வசூல் சாதனையை முறியடிக்க இரண்டு பேரும் தவறியுள்ளனர்.அமெரிக்காவில் பேட்ட திரைப்படம் ரூ. 5 கோடியே 28 லட்சமும் விஸ்வாசம் படம் 60 லட்சமும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் முதல்நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களின் பட்டியலில் பேட்ட மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் இரண்டு இடங்களில் முறையே கபாலி மற்றும் 2.0 ஆகிய படங்கள் உள்ள நிலையில் அமெரிக்காவில் ரஜினியின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது.

Viswasam, விஸ்வாசம்,

கேரளாவில் பேட்ட படம் ரூ.1.14 கோடியும், விஸ்வாசம் படம் 90 லட்சமும் வசூல் செய்துள்ளது.

விஸ்வாசம் படம் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது குடும்பங்கள் கொண்டாடும் படமாக வெளிவந்துள்ளதால் அஜித் பட வரலாற்றில் அதிகம் வசூல் செய்த படமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...