• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சன் பிக்சர்ஸ் அறிவிப்பால் சோலோவாக வெளியாகும் அஜித்தின் வலிமை!

சன் பிக்சர்ஸ் அறிவிப்பால் சோலோவாக வெளியாகும் அஜித்தின் வலிமை!

வலிமை

வலிமை

தமிழின் முன்னணி நடிகர்களை வைத்து தொடர்ச்சியாக படங்கள் தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சூர்யா நடித்திருக்கும் எதற்கும் துணிந்தவன் படம் 2022 பிப்ரவரி 4 வெளியாகும் என்ற சன் பிக்சர்ஸின் அறிவிப்பால் 2022 பொங்கலுக்கு அஜித்தின் வலிமை தனியாக வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

தமிழின் முன்னணி நடிகர்களை வைத்து தொடர்ச்சியாக படங்கள் தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ். தீபாவளிக்கு அவர்கள் தயாரிப்பில் ரஜினி நடித்த அண்ணாத்த வெளியானது. விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை தயாரித்து வருகிறது. சூர்யாவின் எதற்கும் துணிந்தவனும் அவர்கள் தயாரிப்புதான். இதனிடையில் தனுஷை வைத்து திருச்சிற்றம்பலம் என்ற படத்தையும் சத்தமில்லாமல் முடித்திருக்கிறார்கள்.

பீஸ்ட், எதற்கும் துணிந்தவன் படங்களில் எது முதலில் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. பீஸ்ட் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என்பது பரவலான நம்பிக்கை. ஆனால், அதன் படப்பிடிப்பே இன்னும் முடியவடையவில்லை. அதற்குமுன் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பை நிறைவு செய்தார் பாண்டிராஜ். அதனால், பொங்கலுக்கு வலிமை படத்துடன் எதற்கும் துணிந்தவன் மோதும் என்று சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அஜித்தா - சூர்யாவா என்று ரசிகர்கள் இரண்டு நாள் முன்பே இணையத்தில் கச்சைக்கட்ட ஆரம்பித்தனர். இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் 2022 பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகும் என பொங்கிய உற்சாகத்தில் தண்ணி தெளித்து அடக்கியிருக்கிறது சன் பிக்சர்ஸ்.

Also read... வேளாண் சட்டங்கள் ரத்து - வரலாற்று வெற்றி என நடிகர் கார்த்தி மகிழ்ச்சி

எதற்கும் துணிந்தவனில் சூர்யா, ப்ரியங்கா அருள் மோகன், வினய், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு, இளவரசு, ரெடின் கிங்ஸ்லி உள்பட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது. பாண்டிராஜின் முந்தைய கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை மாதிரி இதுவும் கிராமத்துப் பின்னணியில் தயாராகியுள்ளது. பொள்ளாச்சி பாலியல் சம்பவம் படத்தில் வருவதாக உலவும் செய்தி எதற்கும் துணிந்தவனை மேலும் ஸ்பெஷலாக்குகிறது. ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

சன் பிக்சர்ஸின் இந்த அறிவிப்பால் 2022 பொங்கலுக்கு வலிமை தனியாக எந்தப் போட்டியும் இல்லாமல் வெளியாக வாய்ப்புள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: