ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''பணத்தை பற்றிய படம் இது.. அயோக்கியர்களின் ஆட்டம்'' - துணிவு குறித்து மனம் திறந்த ஹெச். வினோத்!

''பணத்தை பற்றிய படம் இது.. அயோக்கியர்களின் ஆட்டம்'' - துணிவு குறித்து மனம் திறந்த ஹெச். வினோத்!

துணிவு

துணிவு

இரு படங்கள் ஒன்றாக வெளியாவதில் பெரிய சிக்கல் இல்லை என கருதுகிறேன். மக்கள் எப்படியும் அஜித் விஜய் படங்களை திரையரங்கிலோ ஓடிடியிலோ பார்த்துவிடுவார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பணம் பற்றிய திரைப்படம் எனவும் அயோக்கியர்களின் ஆட்டம் எனவும் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார்.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் 2023 பொங்கல் அன்று வெளியாகிறது. திரைப்படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் இயக்குநர் வினோத் படம் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

வலிமை படத்திற்கு வந்த கலவையான விமர்சனங்களை எப்படி எதிர்கொண்டீர்கள்?

வலிமை திரைப்படத்தில் எங்கள் குழு பெரும் உழைப்பை செலுத்தியிருந்தோம். ஆனால் சில சமயங்களில் பிழைகளை தவிர்க்க முடியாது. சில நேரங்களில் வலிமை திரைப்படம் மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டதாக நினைத்தேன். சில நேரங்களில் நான் அதற்கு முன் எடுத்த படங்களை மக்கள் கொண்டாடினர். இந்த படத்தை மக்களால் தொடர்புபடுத்திக்கொள்ள முடியவில்லை என தோன்றும். படம் வெளியாகி முதல் 2 நான் மிகவும் குழப்பத்தில் இருந்தேன். 3வது நாளில் குடும்பங்கள் படத்தை கண்டு ரசித்தனர். அப்போது படத்தின் வெற்றியை உணர்ந்தேன்.

கோவிட் காரணமாக திரைப்படம் நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்ததால், ரசிகர்களில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அது அவர்கள் கற்பனை செய்து வைத்திருந்த கதையில் இருந்து மாறுபட்டிருந்தது. அதுமட்டுமின்றி படத்தின் நிறைகள் குறித்து யாரும் பேசவில்லை மாறாக குறைகளை மட்டுமே பேசினர்.

‘துணிவு’ படம் எப்படி தொடங்கியது?

நான் சின்ன பட்ஜெட் படத்திற்காக ஒரு கதை எழுதியிருக்கிறேன் என அஜித் சாரிடம் சொன்னேன். அவருக்கு அந்த கதை மிகவும் பிடித்திருந்தது. நான் நடிக்கவா என கேட்டார். அப்படி தான் இந்த படம் தொடங்கியது.

படம் எது பற்றியது?

இப்போதைக்கு என்னால் எதையும் சொல்ல முடியாது. பணத்தை பற்றிய படம் இது. பணத்தை தினமும் பயன்படுத்துகிறோம். அனால் அது என்ன? எப்படி வேலை செய்கிறது என கேட்டால் நமக்கு தெரியாது. அதுதான் படத்தின் கரு.

பொங்கல் அன்று 2 படங்களும் வெளியாவது சிக்கல் இல்லையா?

இரு படங்கள் ஒன்றாக வெளியாவதில் பெரிய சிக்கல் இல்லை என கருதுகிறேன். மக்கள் எப்படியும் அஜித் விஜய் படங்களை திரையரங்கிலோ ஓடிடியிலோ பார்த்துவிடுவார்கள். வணிக ரீதியாக சிறிய வித்தியாசம் மட்டுமே உள்ளது. நல்ல படம் எது என்பதை மீடியா மக்களிடம் சொல்லி விடுவார்கள். எனவே படத்தில் தரத்தை உயர்த்தவே உழைத்துக்கொண்டு இருக்கிறோம்.

இது போன்ற படங்கள் நேரடியாக மோதுவதை ஊக்குவிக்க வேண்டும். ஓடிடி தளங்களில் பயன்பாடு அதிகரித்துவிட்டது. மக்கள் நம் படங்களை சர்வதேச திரைப்படங்களுடம் ஒப்பிட தொடங்கிவிட்டனர். யஷ் யாரென்றே தெரியாத நிலையில் இருந்து தற்போது நம்பர் 1 ஹீரோவாக மாறியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் முன்னணி நடிகள் வசூல் செய்ய முடியாத பணத்தை பிரதீப் ரங்கநாதன் வசூல் செய்து காட்டியுள்ளார்.

First published:

Tags: Ajith, Valimai, Vinoth