"அஜித்தின் அரசியல் தெளிவு" - கனிமொழி கருத்து
நான் சினிமாவில் தொழில் முறையாக வந்தவன். நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை - நடிகர் அஜித்
news18
Updated: January 22, 2019, 1:41 PM IST
news18
Updated: January 22, 2019, 1:41 PM IST
அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று அஜித் முடிவெடுத்திருப்பது நல்ல முடிவு என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.
சமீபத்தில் திருப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஹரி அஜித் தலைமையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் கட்சியில் இணைந்தனர்.நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித். தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால் தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்.
இனி நீங்கள் மோடியின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். அஜித் ரசிகர்கள் மோடி தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும்” என்று பேசியிருந்தார்.
இதற்கு விளக்கமளிக்கும் விதமாக நடிகர் அஜித் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “தேர்தல் வரும் இந்த நேரத்தில் இத்தகைய செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதோ என்ற ஐயப்பாட்டை மக்கள் இடையே விதைக்கும். எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை. ஒரு சராசரி பொது ஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சகட்ட அரசியல் தொடர்பு.
நான் என் ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ, வாக்களியுங்கள் என்றோ எப்பொழுதும் நிர்பந்தித்தது இல்லை. நிர்பந்திக்கவும் மாட்டேன்.
நான் சினிமாவில் தொழில் முறையாக வந்தவன். நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை. என் ரசிகர்களுக்கும் அதையேதான் நான் வலியுறுத்துகிறேன்” என்று தனது நிலைப்பாட்டை குறிப்பிட்டிருந்தார்."நிஜத்துல முதலமைச்சரானால்... அதில் நடிக்க மாட்டேன்": நடிகர் விஜய் அரசியல் பேச்சு!
இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, “அஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்து கருத்து அவரது கருத்துக்கு நன்றி, அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று அஜித் முடிவெடுத்திருப்பது நல்ல முடிவு” என்று கூறியுள்ளார்.
அஜித்தின் முடிவு தெளிவானது.... தமிழிசை பாராட்டு - வீடியோ
சமீபத்தில் திருப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஹரி அஜித் தலைமையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் கட்சியில் இணைந்தனர்.நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித். தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால் தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்.
இனி நீங்கள் மோடியின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். அஜித் ரசிகர்கள் மோடி தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும்” என்று பேசியிருந்தார்.
இதற்கு விளக்கமளிக்கும் விதமாக நடிகர் அஜித் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “தேர்தல் வரும் இந்த நேரத்தில் இத்தகைய செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதோ என்ற ஐயப்பாட்டை மக்கள் இடையே விதைக்கும். எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை. ஒரு சராசரி பொது ஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சகட்ட அரசியல் தொடர்பு.
நான் என் ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ, வாக்களியுங்கள் என்றோ எப்பொழுதும் நிர்பந்தித்தது இல்லை. நிர்பந்திக்கவும் மாட்டேன்.
நான் சினிமாவில் தொழில் முறையாக வந்தவன். நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை. என் ரசிகர்களுக்கும் அதையேதான் நான் வலியுறுத்துகிறேன்” என்று தனது நிலைப்பாட்டை குறிப்பிட்டிருந்தார்.
Loading...