சீனாவில் ரிலீசாகும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது

news18
Updated: July 22, 2019, 10:59 AM IST
சீனாவில் ரிலீசாகும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை!
அஜித்குமார்
news18
Updated: July 22, 2019, 10:59 AM IST
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை சீனாவில் ரிலீஸ் செய்ய திட்டம் இருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீமேக்காக தமிழில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித்குமார் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி திரைக்கு வர இந்தப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.


படம் குறித்து பேசிய தயரிப்பாளர் போனி கபூர், ‘பிங்க் படத்தின் கதையை மட்டும் வைத்துக்கொண்டு அஜித்திற்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து தமிழில் உருவாக்கியுள்ளோம். இயக்குநர் வினோத் அஜித்தை மாஸ் இமேஜை மனதில் வைத்துக் கொண்டு சிறப்பாக கதை அமைத்துள்ளார். பிங்க் படத்தின் இயக்குநர் அனிருத்தா ராய் சவுத்ரி நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்து சிறப்பாக இருப்பதாக கூறினார்.

இந்திய படங்களுக்கு சீனாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. சீனாவில் கிட்டத்தட்ட 50,000 திரையரங்குகள் இருக்கிறது. அவர்கள் நல்ல கதையை எதிர்பார்க்கிறார்கள். எல்லாம் நன்றாக நடந்தால் நேர்கொண்ட பார்வை படத்தை சீனாவில் ரிலீஸ் செய்ய திட்டம் இருக்கிறது’ என்று கூறியுள்ளார்

முன்னதாக ஸ்ரீதேவி நடிப்பில் 2017-ஆம் ஆண்டு வெளியான மாம் (MOM) படம் சீனாவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அந்தப்படம் கிட்டத்தட்ட 16 மில்லியன் வசூல் செய்தது. ஏற்கனவே மாம் படம் மூலம் சினாவில் கால் பதித்து வெற்ரி பெற்ற போனி கபூர் நிச்சயம் நேர்கொண்ட பார்வை படத்தை சீனாவில் ரிலீஸ் செய்வார் என்றே கூறப்படுகிறது

Loading...

நேர்கொண்ட பார்வை  ட்ரெய்லர்Also watch

First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...