நேர்கொண்ட பார்வை படத்தின் சென்சார் அப்டேட்!

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார்.

Sheik Hanifah | news18
Updated: July 18, 2019, 12:35 PM IST
நேர்கொண்ட பார்வை படத்தின் சென்சார் அப்டேட்!
நேர்கொண்ட பார்வை
Sheik Hanifah | news18
Updated: July 18, 2019, 12:35 PM IST
நேர்கொண்ட பார்வை படத்தின் சென்சார் குறித்த தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், படம் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து நேர்கொண்ட பார்வை படத்துக்கு தணிக்கைக் குழுவில் யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.



வீடியோ பார்க்க: ஜனங்களின் நாயகன் விவேக்!

First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...