வெளிநாடுகளில் வசூல் வேட்டை நடத்தும் நேர்கொண்ட பார்வை... வசூலை அறிவித்த போனி கபூர்

சென்னையில் மட்டும் முதல் 5 நாட்களில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் 6.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

news18
Updated: August 13, 2019, 7:33 AM IST
வெளிநாடுகளில் வசூல் வேட்டை நடத்தும் நேர்கொண்ட பார்வை... வசூலை அறிவித்த போனி கபூர்
நேர்கொண்ட பார்வை வசூல்
news18
Updated: August 13, 2019, 7:33 AM IST
நேர்கொண்ட பார்வை படம் வெளிநாட்டில் மட்டும் 2 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்ததாக போனி கபூர் அறிவித்துள்ளார். 

அஜித் நடிப்பில் கடந்த 8-ம் தேதி வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் ரசிகர்கள், விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகம், வெளிநாடுகளிலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

சென்னையில் மட்டும் முதல் 5 நாட்களில் இப்படம் 6.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படம் முதல் வார இறுதியில் வெளிநாட்டில் மட்டும் 2 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்ததாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்திய மதிப்புபடி 14 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.அஜித், ஸ்ரதா ஸ்ரீநாத் ஆகியோரின் நடிப்பு, யுவன் இசை, ஹெச்.வினோத் இயக்கம் என அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் படம் வரும் நாட்களில் வசூலில் பல சாதனைகளை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also watch

First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...