• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வலிமை ரிலீஸ் தேதியை அறிவித்த போனி கபூர்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

வலிமை ரிலீஸ் தேதியை அறிவித்த போனி கபூர்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அஜித்

அஜித்

நீண்ட நாட்களாக வலிமை திரைப்படத்தின் அப்டேட் வேண்டி காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு வலிமை படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இன்ப அதிர்ச்சி கொடுத்தது. தற்போது, படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என வித்தியாசமான கதைக்களத்தில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர் ஹெச்.வினோத். அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கிய அவர், தற்போது வலிமை திரைப்படத்தை இயக்கியுள்ளார். அஜித் ஜோடியாக ஹுமா குரோஷி நடித்துள்ளார்.

    நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு பிறகு அவரது கணவர் போனி கபூரின் பட நிறுவனத்துக்காக இரண்டு படங்களை நடித்து தருவதாக அஜித் உறுதி அளித்திருந்தார். அந்த வகையில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துவிட்டு வலிமையில் நடித்து கொடுத்துள்ளார்.  இந்த படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  படத்தின் பின் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    நீண்ட நாட்களாக வலிமை திரைப்படத்தின் அப்டேட் வேண்டி காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இதேபோல்,  ‘நாங்க வேற மாறி’ பாடலும் வெளியிடப்பட்டதால் ரசிகர்கள்  மகிழ்ச்சி அடைந்தனர்.  விரைவில் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் என பேச்சு எழுந்தத்தில்  ரசிகர்கள் உற்சாகத்தில் உச்சிக்கே சென்றனர்.

    இதனிடையே, தீபாவளிக்கு  இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படமும்,  வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படமும் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தீபாவளிக்கு வலிமை திரைப்படமும் ரிலீஸ் செய்யப்படும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அஜித் நடிப்பில் கடைசியாக  நேர்கொண்ட பார்வை படம் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரையரங்கில் ரிலீஸ் ஆனது. இதனால் 2 ஆண்டுகள் கழித்து ‘தல’ அஜித்தை திரையில் காண அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

    இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வேட்பு மனு தாக்கல்!


    இந்நிலையில், வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று அவர் அறிவித்துள்ளார் தீபாவளிக்கு திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் மேலும் இரண்டு மாதங்களுக்கு படம் தள்ளிபோயுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: