அடுத்த ரீமேக்கில் அஜித்...‘தல 61’ படமா?

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டிய படம் ஆர்டிகள்- 15.

அடுத்த ரீமேக்கில் அஜித்...‘தல 61’ படமா?
அஜித்குமார்
  • News18
  • Last Updated: September 4, 2019, 8:00 AM IST
  • Share this:
ஆர்டிகள்- 15 திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்க விருப்பம் தெரிவித்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இந்த படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். இதையடுத்து மீண்டும் இதே கூட்டணி அடுத்த படத்திற்காக இணைந்துள்ளது. தல 60 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படம் ரீமேக் படமோ அல்லது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படமோ அல்ல, என்னுடைய கற்பனை கதை என்று இயக்குநர் ஹெச்.வினோத் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அஜித் மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டிய படம் ஆர்டிகள்- 15. இத்திரைப்படத்தை அண்மையில் பார்த்த அஜித், அதில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் உரிமமும் போனி கபூர் வசமுள்ளதால், அஜித்தின் 61-வது திரைப்படமாக இப்படம் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Also watch

First published: September 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...