Home /News /entertainment /

வலிமை படத்துக்காக ரத்த காயங்களுடன் அஜித் - வைரலாகும் படங்கள்!

வலிமை படத்துக்காக ரத்த காயங்களுடன் அஜித் - வைரலாகும் படங்கள்!

அஜித்

அஜித்

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வலிமை திரைப்படம் கடந்த 24-ம் தேதி வெளியானது.

    வலிமை படத்துக்காக அஜித்துக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. தற்போது அதன் படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

    'நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்திருந்தார். அவரின் 60-வது படமாக உருவாகிய இந்தப் படத்தையும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

    மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வலிமை திரைப்படம் கடந்த 24-ம் தேதி வெளியானது. பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வலிமை படப்பிடிப்பின் போது பைக் ஸ்டண்ட் காட்சியில் விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் அஜித்துக்கு பெரிதாக காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டது.

    வைகைப்புயல் வடிவேலுவுடன் பணியாற்றும் தொடர் கனவு நிறைவேறியது - இயக்குநர் மாரி செல்வராஜ்!

    Ajith with injuries for Valimai movie - Picture goes viral on twitter, valimai, valimai release date, ajith injury valimai, ajith injured valimai, அஜித் காயம், காயங்களுடன் அஜித், valimai ticket booking, valimai cast, valimai twitter, valimai update, valimai booking, valimai movie download, ajith injury, வலிமை bgm, வலிமை டீசர், வலிமை சாங் டவுன்லோட், வலிமை update, serial actress srinidhi, serial actress srinidhi instagram, valimai srinidhi, srinidhi valimai, ஸ்ரீநிதி, நடிகை ஸ்ரீநிதி
    அஜித்


    வேறுபாடுகள் காரணமாக தனுஷ் படத்திலிருந்து விலகுகிறேன் - பாடலாசிரியர் விவேக்

    ஆனால் தற்போது அந்தப் படங்கள் வெளியாகி ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில் ரத்தக் காயங்களுடன் சிகிச்சைப் பெறுகிறார் அஜித். அந்தப் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Ajith, Ajith, Valimai

    அடுத்த செய்தி