Home /News /entertainment /

Ajith: சந்தோஷமா இருங்க, நேர்ல மீட் பண்ணுவோம் - ரசிகருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அஜித்!

Ajith: சந்தோஷமா இருங்க, நேர்ல மீட் பண்ணுவோம் - ரசிகருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அஜித்!

அஜித்

அஜித்

தனது ரசிகர் ஒருவருக்கு, அஜித் ஃபோனில் கூறிய பிறந்தநாள் வாழ்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நடிகர் அஜித் தனது ரசிகர் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறிய ஆடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

    நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக 'ஏகே 61' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதன் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு ஜூலை இரண்டாம் பாதியில் புனேயில் தொடங்குகிறது.

    மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவு - ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்...

    'ஏகே 61' படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. படத்தில் நடிக்கும் அவரின் தோற்றம் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியானது. ஆனால் படத்தின் க்ளைமாக்ஸுக்கு அவர் வித்தியாசமான தோற்றத்தில் நடிப்பதால், அதை வெளியில் காட்டாமல் ரகசியமாக வைத்திருக்க அஜித்தும் படக்குழுவினரும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

    கணவர் வித்யாசாகருக்கு பிரியா விடை அளித்த நடிகை மீனா

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    இது ஒருபுறமிருக்க, தனது ரசிகர் ஒருவருக்கு, அஜித் ஃபோனில் கூறிய பிறந்தநாள் வாழ்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், “ஹேப்பி பர்த் டே, ஹேப்பி பர்த் டே.. ஆரோக்கியமா, சந்தோஷமா இருங்க, நேர்ல மீட் பண்ணுவோம்” என ரசிகரிடம் பேசியுள்ள்ளார் அஜித். அந்த ஆடியோவை ஒரு வீடியோவுடன் இணைத்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Ajith

    அடுத்த செய்தி