Home /News /entertainment /

இன்றிரவு சென்னை திரும்புகிறார் நடிகர் அஜித்… அடுத்ததாக தாய்லாந்து பயணம்

இன்றிரவு சென்னை திரும்புகிறார் நடிகர் அஜித்… அடுத்ததாக தாய்லாந்து பயணம்

அஜித்

அஜித்

அஜித்துடன் படத்தின் ஹீரோயின் மஞ்சு வாரியரும் பைக் சாகச பயணத்தில் இணைந்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பைக் சாகச பயணங்களை முடித்துக்கொண்டு நடிகர் அஜித் இன்றிரவு சென்னை திரும்புகிறார். அடுத்ததாக ஏகே 61 படத்தின் ஷூட்டிங்கிற்காக தாய்லாந்து செல்லவுள்ளார். அதுகுறித்த முக்கிய தகவல்களும் வெளிவந்துள்ளன.

    வலிமை படத்தின்வெற்றியைத் தொடர்ந்து எச்.வினோத், அஜித், போனி கபூர் கூட்டணி மீண்டும் இணைந்து படத்தை உருவாக்கி வருகிறது. இந்த படத்திற்கு ஏகே 61 என ஒர்க்கிங் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக் கனி, வீரா, ஜான் கோக்கன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். வலிமை படத்திற்கு சற்று கலவை விமர்சனங்கள் கிடைத்த நிலையில், இந்த படத்தை மிகுந்த கவனத்துடன் இயக்குனர் எச். வினோத் உருவாக்கி வருகிறார்.

    தனுஷின் கேப்டன் மில்லர் பட அப்டேட்… 2 முக்கிய நடிகர்கள் படத்தில் இணைந்தனர்…

    படத்தில் அஜித் சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே அஜித் கடந்த 2 மாதங்களாக ஐரோப்பா மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பைக் சாகச பயணங்களில் ஈடுபட்டு வந்தார்.

    அஜித்துடன் படத்தின் ஹீரோயின் மஞ்சு வாரியரும் பைக் சாகச பயணத்தில் இணைந்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

    இந்நிலையில் சாகச பயணங்களை முடித்துக் கொண்டு அஜித் இன்றிரவு சென்னை திரும்புவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்ததாக, ஏகே 61 படக்குழுவினர் தாய்லாந்தின் பாங்காக்கிற்கு செல்கின்றனர்.

    ‘ஒரு நாள் ஓய்வெடுத்து, பிறந்த நாளை கொண்டாடுங்கள்’ – மோடிக்கு வாழ்த்துச் சொன்ன நடிகர் ஷாரூக்கான்

    பாங்காக்கில் அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் பைக் சேசிங் காட்சிகள் படமாக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த மாதத்துடன் ஏகே 61 படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்று விடும் என்றும், பொங்கலுக்கு படம் வெளிவர அதிக வாய்ப்புகள் உள்ளதாகவம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Ajith

    அடுத்த செய்தி