‘வலிமை’ கதையில் இதையும் கொஞ்சம் சேர்த்துக்கலாமே? இயக்குநருக்கு அஜித் கொடுத்த யோசனை..

‘வலிமை’ திரைப்படத்தில் சில மாற்றங்கள் செய்ய இயக்குநருக்கு அஜித் யோசனை சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘வலிமை’ கதையில் இதையும் கொஞ்சம் சேர்த்துக்கலாமே? இயக்குநருக்கு அஜித் கொடுத்த யோசனை..
அஜித் குமார்
  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 12:21 PM IST
  • Share this:
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகவும் கார், பைக் ரேஸ் காட்சிகள் அதிகம் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஹைதராபாத் சென்னை, உள்ளிட்ட இடங்களில் சுமார் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான படப்பிடிப்பை படக்குழு நடத்தி முடித்திருக்கும் நிலையில் சில ஆக்‌ஷன் காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கவும் திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக உள்நாட்டிலேயே படப்பிடிப்பை நடத்த ‘வலிமை’ டீம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘வலிமை’ படப்பிடிப்பு கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் மீண்டும் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் அஜித் இல்லாத சிறு சிறு காட்சிகளை படமாக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.


இந்நிலையில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும் இந்தப் படத்தில் பெண்களைக் கவரும் சென்டிமென்ட் சீன்களையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுமாறு இயக்குநருக்கு அஜித் யோசனை சொன்னதாக கூறப்படுகிறது.



‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் கைகொடுத்ததால் அஜித் இவ்வாறு யோசனை சொன்னதாகவும், அதனடிப்படையில் கதையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading