Home /News /entertainment /

ஒரே நிகழ்ச்சிக்கு வருகை தரப்போகும் அஜித் – விஜய்? கோலிவுட்டில் பரபரப்பு…

ஒரே நிகழ்ச்சிக்கு வருகை தரப்போகும் அஜித் – விஜய்? கோலிவுட்டில் பரபரப்பு…

விஜய் - அஜித்

விஜய் - அஜித்

திருமண வரவேற்பில் அஜித், விஜய் பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளதால் சினிமா ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஒரே நிகழ்ச்சிக்கு அஜித்தும், விஜய்யும் வரப்போவதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் இருவரின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல தென்னிந்திய நடிகை நயன்தாரா 'நானும் ரவுடி தான்' இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தனர்.

இருவரும் ஜூன் 9ம் தேதியன்று திருமணம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். அவர்களின் திருமண வரவேற்பிற்கு ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட 30 பிரபலங்கள் அழைக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க - உலகின் மிக உயரமான ஸ்க்ரீனில் வெளியாகும் விக்ரம் படத்தின் ட்ரெய்லர்… புரொமோஷனில் புதிய உச்சம்

ஜூன் 8ஆம் தேதி நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு 30 பிரபலங்கள் உட்பட சுமார் 200 பேரை அழைக்க திட்டமிட்டுள்ளார்களாம். ரஜினிகாந்த், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

மறுநாள் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் நடக்கும் தங்கள் திருமணத்திற்கு குறிப்பிட்ட நபர்களை மட்டுமே நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அழைத்துள்ளனர்.

இதையும் படிங்க - 40 வயதிலும் செம்ம ஹாட்டாக இருக்கும் மீரா ஜாஸ்மின்!

இருவரின் திருமண வரவேற்பில் அஜித், விஜய் பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளதால் சினிமா ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் சமீப காலங்களில் தமிழகத்தின் பிரபலமான கோயில்களுக்கு சென்று வந்தனர். அந்தப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலாகின.

இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரூ. 66 கோடியை வசூலித்து வெற்றி பெற்றது.

இந்த படத்திற்கு பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில் ஜூன் 9ம்தேதி இருவரின் திருமணம் நடைபெறவுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Actor Ajith, Actor Vijay

அடுத்த செய்தி