ஹோம் /நியூஸ் /entertainment /

''அஜித், விஜய் ரசிகர்கள் மோசம்.. இப்படி தான் பண்ணுவாங்க'' - ஃபேன்ஸ் குறித்து பேசிய ஹெச்.வினோத்

''அஜித், விஜய் ரசிகர்கள் மோசம்.. இப்படி தான் பண்ணுவாங்க'' - ஃபேன்ஸ் குறித்து பேசிய ஹெச்.வினோத்

அஜித், விஜய்

அஜித், விஜய்

ரஜினி அல்லது கமலுடன் வேலை செய்யும்போது கூட ரசிகர்கள் இவ்வளவு ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

அஜித், விஜய் ஆகியோரை இயக்குவது வடிவேலு மாதிரி தான் ஃபீல் ஆகும் என துணிவு திரைப்பட இயக்குநர் ஹெச்.வினோத் கூறியுள்ளார்.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் 2023 பொங்கல் அன்று வெளியாகிறது. இந்நிலையில் திரைப்படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. அத்தோடு படத்தின் இயக்குநர் வினோத் படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

படம் குறித்து வரும் கணிப்புகள் குறித்து மிகவும் கவலைப்படுகிறீர்கள். அது உங்களுக்கு சவாலாக இருக்கிறதா?

இந்த பிரச்னை, அஜித், விஜய்-ஐ இயக்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் இருக்கிறது. ரஜினி அல்லது கமலுடன் வேலை செய்யும்போது கூட இவ்வளவு ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொள்ள மாட்டார்கள், கொடூரமான முறையின வசைபாடி கொள்ள மாட்டார்கள். தனிநபர் தாக்குதலில் ஈடுபட மாட்டார்கள்.

சமூக வலைதளங்களில் படம் குறித்த தவறான செய்தியை குழுக்களாக இணைந்து பரப்ப மாட்டார்கள். இந்த ரெண்டு பேருக்கு படம் பண்ணும்போது நம்ம வடிவேலு மாதிரி தான் ஃபீல் பண்ணுவோம். எங்க அண்ணன் மேல கை வச்சு பாருடாங்குற லெவெல்ல தான் இவங்க ஆக்டிவிட்டீஸ்லாம் இருக்கும்.

First published:

Tags: Actor Vijay, Ajith, Vinoth