முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அஜித், விஜய் எனக்கு ஒரு போன்கூட பண்ணல.. நடிகர் பொன்னம்பலம் வருத்தம்

அஜித், விஜய் எனக்கு ஒரு போன்கூட பண்ணல.. நடிகர் பொன்னம்பலம் வருத்தம்

அஜித், விஜய், பொன்னம்பலம்

அஜித், விஜய், பொன்னம்பலம்

தான் இந்த மோசமான நிலைமைக்கு சென்றதற்கு காரணம் தன்னுடைய சகோதரர் தான் என்று பொன்னம்பலம் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர்கள் அஜித், விஜய் குறித்து பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் நடிகர் பொன்னம்பலம். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவிலும் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார். அவர் நடிப்பில் வெளிவந்த நாட்டாமை திரைப்படம் அவருக்கு மிகப்பெரும் பெயரை பெற்று கொடுத்தது. ரஜினி, விஜய், அஜித் கமல் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் அவர் இணைந்து நடித்திருக்கிறார்.

இதற்கிடையே சில வாரங்களுக்கு முன்னதாக பொன்னம்பலத்திற்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. சிறுநீரகம் செயலிழந்து போனதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது குணமடைந்து திரும்பி உள்ளார். அவருக்கு அவருடைய உறவினர் மற்றும் இயக்குனரான ஜெகநாதன் சிறுநீரகத்தை வழங்கி இருக்கிறார். இந்நிலையில் தான் இந்த மோசமான நிலைமைக்கு சென்றதற்கு காரணம் தன்னுடைய சகோதரர் தான் என்று பொன்னம்பலம் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.

தன்னுடைய சகோதரர் தனக்கு பீரில் விஷத்தை கலந்து கொடுத்ததால் தனது கிட்னி பெயிலியர் ஆனதாக பொன்னம்பலம் கூறியுள்ளார். தன்னுடைய உடல்நிலை குறித்து அஜித், விஜய், விக்ரம் ஆகியோர் விசாரிக்கவே இல்லை என்று குற்றம் சாட்டிய பொன்னம்பலம் அஜித்தை தனது சொந்த தம்பியாக நினைத்ததாகவும் ஆனால் அவர் ஒரு போன் கூட செய்யவில்லை என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதேபோன்று விஜய்யும் தனக்கு ஒரு போன் கூட செய்யவில்லை என்று பொன்னம்பலம் வருத்தப்பட்டுள்ளார்.

' isDesktop="true" id="910781" youtubeid="jK_pIbw6Z50" category="cinema">

இது தொடர்பாக பொன்னம்பலம் பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: Actor Vijay, Ajith, Kollywood