வலிமை சூப்பர் அப்டேட்: அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

வலிமை சூப்பர் அப்டேட்: அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

அஜித் குமார்

நடிகர் அஜித்தின் வலிமை படம் குறித்த மேலும் ஒரு சிறப்பான அப்டேட் கிடைத்துள்ளது.

  • Share this:
    நடிகர் அஜித்தின் வலிமை படம் குறித்த மேலும் ஒரு சிறப்பான அப்டேட் கிடைத்துள்ளது.

    இந்தி படமான பிங்க் திரைப்படத்தை நேர்கொண்ட பார்வையாக அஜித்தை வைத்து, தமிழில் ரீமேக் செய்த ஹெச்.வினோத் தற்போது வலிமையை இயக்கி வருகிறார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என சூப்பர் ஹிட் படங்களை தந்தவர் என்பதால் வலிமை படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

    வலிமை திரைப்படத்தில் ஹுமா குரோஷி நாயகியாக நடிக்க, கார்த்திக்கேயா வில்லனாக நடித்துள்ளார். போனி கபூர் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசை. படத்தின் பர்ஸ்ட் லுக்கை மே 1 அஜித்தின் பிறந்தநாளில் வெளியிடுவதாக போனி கபூர் அறிவித்திருந்தார்.

    கொரோனா காலத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்து அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங்கை தொடங்கினார் வினோத். நேற்றுடன் அஜித், தான் சம்பந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் பணியை முடித்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

    ஆக்‌ஷன் நிறைந்த படமாக வலிமை தயாராகியுள்ளது. அநேகமாக மே 1-ம் தேதி, படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கலாம் எனத் தெரிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: