Home /News /entertainment /

Valimai: இன்னும் சற்று நேரத்தில் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வலிமை ட்ரைலர்!

Valimai: இன்னும் சற்று நேரத்தில் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வலிமை ட்ரைலர்!

வலிமை

வலிமை

வலிமை படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    அஜித் நடித்திருக்கும் வலிமை படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    ஐஸ்வர்யாவை பிரிந்ததால் நிறைவேறாமல் போன தனுஷின் நீண்ட நாள் கனவு

    தற்போது வலிமை படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்து வரும் 24-ம் தேதி வெளியாகக் காத்திருக்கிறது. முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், பாடல்கள் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோ உள்ளிட்டவைகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

    இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக பிக் பாஸ் 5 பெண் பிரபலம் மீது புகார்



    இந்நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தவிர ரிலீஸைப் பொறுத்தவரை மதுரையில் கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளிலும் வலிமை வெளியாகிறது. இதன்மூலம் மதுரையில் ஓப்பனிங் வசூலில் வலிமை சாதனை படைக்கும் என்கிறார்கள். அதேபோல் சென்னையிலும் அதிக அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Ajith, Valimai

    அடுத்த செய்தி